ராமதாஸ் பொம்மைக்கு அவதூறு .. பதட்டத்தில் கடலூர்
கடலூர்:
பாட்டாளி மக்கள் கொடி கம்பத்தில் ராமதாஸ் பொம்மைக்கு செருப்பு மாலைபோடப்பட்ட சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்குபோலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூருக்கு அருகே இருக்கும் கருங்குழி கிராமத்தில் காளி கோயில்அருகே வெள்ளிக்கிழமை காலை பா.ம.க. கட்சி கொடிக்கம்பத்தில் வைக்கோலால்பொம்மை ஒன்று கட்டப்பட்டு அதில் ராமதாஸ்,காடுவெட்டி குரு என எழுதி அந்தபொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. அருவருக்கத்தக்கவார்த்தைகளும் அதில் எழுதப்பட்டிருந்தன.
இதை அறிந்ததும் பா.ம.க. தொண்டர்கள் கோபத்துடன் கூட்டம் கூட்டமாக அங்குதிரண்டனர். இதையடுத்து அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.தகவலறிந்ததும் விழுப்புரம் போலீஸ் டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்றனர்.
போலீசார் அங்கு வருவதை எதிர்த்து மறியலில் ஈடுபட முயன்ற மகளிர் சுய உதவிகுழுவினரை போலீசார் எச்சரித்தனர். குற்றம் செய்தவர்கள் மீது மட்டும் நடவடிக்கைஎடுக்கப்படும் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என எச்சரிக்கை செய்த பின்அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தை அமைப்பைச் சேர்ந்த 10 பேர் மீதுவழக்கு தொடரப்பட்டது. 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமாதாஸ் உருவ பொம்மை அவமதிக்கப்பட்ட விஷயம் மாவட்டம் முழுவதும்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்டத்தின் முக்கிய இடங்களில்ஆயுதம் தாங்கிய போலீசார் காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications