நலம் கொழிக்கட்டும் .. தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழர் திருநாளான பொங்கள் திருநாளையொட்டி தமிழகஆளுநர் பாத்திமா பீவி, முதல்வர் கருணாநிதி, முன்னாள்முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தமிழக மக்களுக்குவாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் திருநாள் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகொண்டாடப்படுகிறது. 15-ம் தேதி மாட்டுப் பொங்கல்கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்கூறியுள்ளதாவது:

அறுவடைத் திருநாள், நமது பாரம்பரிய கலாச்சாரத்தையும்,பழக்கத்தையும் நம்மிடையே அமைதி, ஒற்றுமை,மதச்சார்பின்மை ஆகியவற்றை வளர்க்க உதவட்டும்.

தமிழக மக்கள் மகிழ்ச்சியுடனும், முன்னேற்றத்துடனும் இருக்கஎனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி:

வளர்ச்சிக்கான அனைத்து முட்டுக்கட்டைகளையும் அகற்ற நாம்இந்த நன்னாளில் உறுதி பூணுவோம். திமுக அரசு இதுவரைமக்களுக்கு செய்து வந்த நல்ல பணிகள் இனியும் தொடரும்.

தமிழக மக்கள் நலத்துடனும், தமிழ்நாடு, அறிவியல் மற்றும் சமூகவளர்ச்சியில் உலகிலேயே முதல் மாநிலமாக வளரவும்வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா:

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமானஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சமூகத்தைசீரழித்து வரும் அழிவு சக்திகளை வேரறுக்க மக்கள் உறுதி எடுக்கவேண்டும். பொற்காலத்தை நோக்கி நடைபோட நம்பிக்கையுடன்முன்னேற வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களும் பொங்கல்வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+