90 வயது இலங்கை தமிழ் மூதாட்டியின் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 90 வயது தமிழ் மூதாட்டி, தன்னைஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருக்க அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மெல்போர்ன் நகரிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி:

மரியநாயகி சவரிமுத்து என்பவர் இலங்கையைச் சேர்ந்தவர். ஓரளவு பார்வையின்மை கொண்டவர். 2ஆண்டுகளுக்கு முன்பு அவர் இலங்கையிலிருந்து வெளியேறி அகதியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்தார். அவரதுகுடும்பத்தைச் சேர்ந்த 40 பேர் ஆஸ்திரேலியாவில்தான் வசித்து வருகிறார்கள்.

மெல்போர்ன் நகரிலுள்ள மருத்துவமனையில் தற்போது மரியநாயகி தங்கியுள்ளார். தனது நிலை குறித்துமரியநாயகி செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையில் எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை. எனதுகுடும்பத்தினரின் வீடுகள், இலங்கை ராணுவ வீரர்கள், விடுதலைப் புலிகள் சண்டையில் இடிக்கப்பட்டு விட்டன.

மீண்டும் இலங்கை திரும்ப நான் விரும்பவில்லை. இங்கேயே எனது இறுதிக் காலத்தைக் கழிக்க விரும்புகிறேன்என்றார்.

அவரது மகன் ராஜா கூறுகையில், எனது தாயாரை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப ஆஸ்திரேலியஆஸ்திரேலிய அகதிகள் டிரிப்யூனல் முடிவு செய்துள்ளது, எங்களது குடும்பத்தினரை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.நாங்கள் மிகவும் கவலையுடன் உள்ளோம்.

டிரிப்யூனலின் இந்த முடிவை மறு பரிசீலனைசெய்யுமாறு ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் பிலிப்ருட்டாக்கிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வந்த ஆயிரக்கணக்கான மக்களை அவர்களது நாட்டிற்கேகட்டாயப்படுத்தி ஆஸ்திரேலிய அரசு அனுப்புவதற்கு மனித உரிமை அமைப்புகள் பல கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளன.

சமீப காலமாக ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அகதிகளாக படகுகளில்ஆஸ்திரேலியாவிற்கு வந்தனர். ஆனால் அவர்களை ஆஸ்திரேலியா மீண்டும் அவர்களது நாட்டுக்கே அனுப்பிவைத்தது.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 2000 அகதிகள் ஆஸ்திரேலியாவிற்கு வந்துள்ளதாக அந்நாட்டு அரசுகூறியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை மொத்தம் 4000 பேர் அகதிகளாக வந்ததாகவும் அதுகூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+