கோலாலம்பூர் தீவிபத்தில் 5 தமிழர்கள் சாவு
கோலாலம்பூர்:
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில், ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கருகி இறந்தனர்.இவர்கள் அனைவரும் தமிழர்கள்.
கோலாலம்பூரில் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்தவர் காளீஸ்வரன் (42). இவரது மனைவி தமிழ்ச் செல்வி(40). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். மலேசிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில்,இவர்கள் குடியிருந்த அபார்ட்மென்ட்டில் தீப் பிடித்தது. காளீஸ்வரன் குடியிருந்த வீடு 15-வது தளத்தில் இருந்தது.
தீப்பிடித்துக் கொண்டதும் காளீஸ்வரன் குடும்பத்தினர் தப்பிக்க வழியில்லாமல் துடித்தனர். இந்த நிலையில், தமிழ்ச்செல்வி, மூன்று மகள்களும் தீயில் கருகி இறந்தனர். காளீஸ்வரனும், மூத்த மகள் சுபத்ராவும் (18) மட்டும் உயிர்தப்ப போராடினர். இந்த நிலையில் பாத்ரூமில் இருந்த ஜன்னலை உடைத்த காளீஸ்வரன், அதன் வழியேசுபத்ராவை வெளியே தள்ளினார். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை. இறுதியில் அவரும்தீக்கிரையாகினார். சுபத்ரா மட்டும் உயிர் தப்பினார்.
பலத்த தீக்காயத்துடனும், உடல் முழுவதும் கண்ணாடித் துண்டுகள் குத்தியிருந்தும் கூட, தனது குடும்பத்தினரைக்காப்பாற்றக் கோரி சுபத்ரா கதறினார். அவரது உடலில் உள்ளாடை மட்டுமே மிஞ்சியிருந்தது.
சுபத்ராவின் குரலைக் கேட்ட பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் ஓடிவந்துள்ளனர். வீட்டுக் கதவை உடைத்து உள்ளேசிக்கியிருந்தவர்களைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அது தோல்வியில்தான் முடிந்தது.
தீயணைப்புப் படை வீரர்களுக்கத் தகவல் போய் அவர்கள் வந்து 1 மணி நேரத்திற்குப் பிறகே தீஅணைக்கப்பட்டது. சுபத்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications