பாண்டி.யில் திருவள்ளுவர் தினம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் திருவள்ளுவர் தின விழா திங்கள்கிழமை விமரிசையாககொண்டாடப்பட்டது.
திருக்குறளை எழுதிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்தநாள் விழாவானதிருவள்ளுவர் தினம் பாணடிச்சேரியில் திங்கள்கிழமை விமரிசையாககொண்டாடப்பட்டது.
பாண்டிச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் ரெங்கசாமி உள்ளிட்ட பல சட்டமன்றஉறுப்பினர்களும், அரசு அதிகாரிகளும் திருவள்ளுவர் சிலைக்கு மாலையணிவித்துமரியாதை செலுத்தினர்.
பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நாராயணசுவாமி மற்றும் தமிழறிஞர்கள்பலரும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாண்டிச்சேரியில் இருக்கும் கல்விநிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications