மனைவியிடம் மன்னிப்பு கேட்டார் போத்தம்
லண்டன்:
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹோட்டல் பணிப் பெண்ணிடம் தொடர்பு கொண்டிருந்ததற்காக, தனது மனைவிமற்றும் குடும்பத்தினரிடம் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் போத்தம் பகிரங்கமாக மன்னிப்புகேட்டுள்ளார்.
45 வயதாகும் போத்தம், 31 வயதான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கைலி வெர்ரல்ஸ் என்ற பெண்ணிடம் தொடர்புகொண்டிருந்ததாக, இங்கிலாந்து பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இது வெளியான அடுத்த நாளே(திங்கள்கிழமை) போத்தம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றில் பணியாற்றுபவர் கைலி. 1988-ம் ஆண்டு நடந்தபுத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போத்தம் சிட்னி சென்றிருந்தார். அப்போதுதான் கைலியை அவர்சந்தித்தார். அப்போது முதல் இருவரும் அடிக்கடி சந்தித்துள்ளதாக அந்த பத்திரிகைச் செய்தியில்வெளியாகியிருந்தது.
போத்தம் பத்திரிகைகளுக்கு கொடுத்த மன்னிப்பு அறிக்கையில், எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இதுமிகவும் நெருக்கடியான நிமிடங்கள். எனது செயலுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.எனது செயலால் எனது குடும்பத்தினர், குறிப்பாக எனது மனைவி அடைந்த துயரங்களுக்காக வருத்தப்படுகிறேன்.
என்னையும், எனது குடும்பத்தினரையும் பத்திரிகையாளர்கள் இத்தோடு விட்ட விடக் கேட்டுக் கொள்கிறேன்.இதற்கு மேல், இந்தப் பிரச்சனை குறித்து அறிக்கை எதுவும் வெளியிட மாட்டேன் என்று கூறியிருந்தார் போத்தம்.
கைலி வெர்ரல்ஸ் கூறியதாக அந்தப் பத்திரிகையில் வெளியாகியிருந்த தகவல்:
1998ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையே நடந்த கிரிக்கெட் தொடரின்போதுபோத்தம் டி.வி வர்னணையாளராக வந்திருந்தார். அப்போது நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியின்போது என்னைச்சந்தித்தார் போத்தம். இதையடுத்து இருவரும் நண்பர்களானோம்.
பின்னர் மெல்போர்ன், அடிலைட் ஆகிய நகரங்களில் போட்டி நடந்தபோது போத்தம் தன்னுடன் வருமாறுஎன்னையும் அழைத்தார். ஆறு வாரங்களுக்குப் பிறகு தனது மனைவியுடன் போத்தம், யார்க்ஷயர் (போத்தமின்ஊர்) திரும்பி விட்டார்.
இருப்பினும் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் போத்தம் ஆஸ்திரேலியா வந்தார். என்னைச் சந்தித்தார். பின்னர்நாங்கள் இருவரும், எனது மகள் ஜார்ஜியாவுடன் (7 வயது) ஸ்காட்லாண்டு, பாரீஸ் ஆகிய இடங்களுக்குச்சென்றோம்.
எங்களுக்கிடையே இ-மெயில் தொடர்பும் இருந்தது. போத்தம் என்னை ராணி போல கவனித்துக் கொண்டார்.எனது கனவெல்லாம் நனவானது போல உணர்ந்தேன். ஆனால் மனைவியை விட்டு போத்தம் பிரிய மாட்டார்என்று தெரிந்ததும், மனம் உடைந்து விட்டேன்.
போத்தமுடன் நான் இருந்த நாட்களில் எனக்கு பல பொருட்களையும் அவர் வாங்கித் தந்தார் என்று கூறியிருந்தார்கைலி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications