ஜிதேந்திர பிரசாதா காலமானார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Jitendra Prasadமூத்த காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர பிரசாதா, எட்டு நாள் உயிர்ப் போராட்டத்திற்குப் பிறகு டெல்லி அப்பல்லோமருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மரணமடைந்தார்.

ஜனவரி 8-ம் தேதி மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டதன் காரணமாக டெல்லியிலுள்ள ஆர்.எம்.எல்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அடுத்த நாள் அப்பல்லோ மருத்துவமனையில் ஜிதேந்திராபிரசாதா சேர்க்கப்பட்டார். அதற்கு அடுத்த நாளே, அவர் சுய நினைவிழந்தார்.

சில நாட்களுக்கு முன்பு அவரது உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் தெரிந்தது. இருப்பினும்,செவ்வாய்க்கிழமை காலை அவரது உடல் நிலை மோசமடைந்து, அவர் மரணமடைந்தார்.

ஜிதேந்திர பிரசாதாவுக்கு 62 வயதாகிறது. அவருக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தபோது, சோனியா காந்தியை எதிர்த்துப்போட்டியிட்டு பரபரப்பேற்றியவர் ஜிதேந்திர பிரசாதா. இவர் உத்திர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராகவும்இருந்திருக்கிறார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+