யானை இறவைப் பிடிக்க ராணுவம் தீவிரம் .. புலிகள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

யானை இறவுப் பகுதியை பிடிக்க இலங்கை அரசு ராணுவ நடவடிக்கையைத்தீவிரப்படுத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள், நார்வே தூதுக் குழுவிடம் புகார்தெரிவித்துள்ளனர்.

இலங்கை ராணுவம் கினிஹாரா -9 என்றழைக்கப்படும் தாக்குதலைசெவ்வாய்க்கிழமை முதல் தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கு யாழ்ப்பாணத்தில்செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் இரு தரப்பிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை90-ஐ தாண்டியுள்ளது.

ராணுவத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், நார்வே தூதுக்குழுத் தலைவர் எரீக் சொல்ஹீமுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

இதுபோன்ற ஆவேசமான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றுஇலங்கை அரசுக்கு அறிவுரை கூறுங்கள். இந்த தீவிர ராணுவ தாக்குதல் காரணமாகதற்போது நடந்து வரும் அமைதித் தீர்வுக்கான நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்றுகூறியுள்ளார்.

இதற்கிடையே, ராணுவ நடவடிக்கை குறித்து புலிகளின் லண்டன் அலுவலகம்வெளியிட்ட அறிக்கையில், யானை இறவுப் பகுதியை கைப்பற்றும் நோக்கத்துடன்தான்ராணுவம் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாணத்தைத்தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட முடியும் என்று ராணுவம் நம்புகிறதுஎன்று கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே வடக்கு யாழ்ப்பாணத்தில் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இதுகுறித்து, ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணரத்னேகூறியதாவது:

செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் விடுதலை புலிகள் தரப்பில் 52 பேர்கொல்லப்பட்டனர். 72 பேர் காயமடைந்தனர். இலங்கை ராணுவ வீரர்கள் 31 பேர்கொல்லப்பட்டனர். 89 பேர் காயமடைந்தனர் என கூறினார்.

அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை இலங்கை ராணுவம் பொன்னார், அவரக்காடு, கிலாலிக்கு தென்கிழக்கு பகுதியிலும் எழுத்துமடுவல் பகுதியிலும் 7 கிமீ தூரம் முன்னேறியுள்ளனர்.

தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையேகுறைந்த இடைவெளியில் சண்டைநடப்பதால் தீவிர மார்டார் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் இறக்கின்றனர்.

இரண்டு ஆண் புலிகளும், ஒரு பெண் புலியும் கண்ணிவெடி வெடித்ததில்காயமடைந்தனர். அவர்கள் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.ஆனால் ஆச்சர்யப்படத்தக்க வகையில் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளசயனடை உட்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+