புலிகளிடம் பலமுனை தாக்குதல் ராக்கெட்டுகள்?
கொழும்பு:
வடக்கு யாழ்ப்பாணத்தில் இரு தினங்களுக்கு முன் நடந்த கினிஹாரா 9 என்ற தாக்குதலில் விடுதலைப்புலிகள் பல முனைகளில் தாக்கக் கூடியராக்கெட்டுக்களைப் பயன்படுத்தியதாக ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், 1999 ம் ஆண்டு ராணுவ வீரர்கள் அதி நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள்.ஆனால், அதற்கு முன்பே விடுதலைப்புலிகள் அதி நவீன ஆயுதங்களை வாங்கி விட்டார்கள். அந்த ஆயுதங்களை வைத்து அவர்கள் தற்போது தாக்குதல்நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கிலாலி மற்றும் எலுத்திமடுவில் பகுதிகளில் ராணுவ வீரர்கள், விடுதலைப்புலிகளை நோக்கி கினிஹாரா 9 என்ற தாக்குதலைநடத்தினார்கள். கடந்த இரண்டு நாட்களாக விடுதலைப்புலிகளும் இந்தத் தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
கினிஹாரா - 9 தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 52 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 ராணுவ அதிகாரிகளும் 227ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.
யானையிறவு பகுதி நோக்கிச் செல்லும் அவரக்காடு பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 விடுதலைப்புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அங்கிருந்து புலிகள் விட்டுச் சென்ற 21 டி 56 துப்பாக்கிகளை ராணுவ வீரர்கள் பறிமுதல் செய்தனர் என்றார்.
ஆனால் கடந்த இரண்டு நாட்கள் நடந்த தாக்குதல் குறித்து புலிகள் கூறுகையில், இரண்டு நாள் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.
அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விடுதலைப்புலிகள் தங்களிடம் உள்ள அனைத்து விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தினார்கள். அவர்கள்இதுபோன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தும் போது, அவர்கள் மிகப்பெரிய தாக்குதலுக்குத் தயாராகி விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஆர்ட்டிலரி மற்றும் மார்ட்டர் குண்டுகள் வைத்துத் தாக்குதல் நடத்தியதால்தான் 50 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இறந்து விட்டனர் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளுக்கு ஆதரவாகப் போராட்டம்:
இதற்கிடையே விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்திற்கு அரசு சாதகமான பதில் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 5000 க்கும்மேற்பட்ட மாணவர்கள், சமூக சேவை நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன் கூடி போராட்டம் வியாழக்கிழமைபோராட்டம் நடத்தினார்கள். இவர்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக 13 மாணவர்களைப் போலீஸார்கைது செய்தனர்.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications