கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்டுவதை எதிர்க்கும் புத்த துறவி
கொழும்பு:
இலங்கையில், கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டும் பணியை புத்த மதத் துறவி ஒருவர் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
இலங்கையில் புத்த மதமே மிகப் பெரிய மதம். அங்கு புத்த துறவிகளை மீறி எதுவும் நடக்காது. மதம்மட்டுமல்லாது, அரசியலிலும் அவர்களது பங்கு அதிகம் உண்டு. புத்த மதத் துறவிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டத் திருத்த மசோதவை அதிபர் சந்திரிகா வாபஸ் பெறவேண்டியதாயிற்று. அந்தளவு அவர்களது ஆதிக்கம் அதிகம்.
இப்போது கிரிக்கெட்டிலும் இந்த புத்த துறவிகள் நுழைந்து விட்டார்கள். இலங்கைத் தலைநகர் கொழும்பு அருகேதம்பல்லா என்ற இடத்தில், புதிதாக கட்டப்படும் கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்டும் பணியை நிறுத்த வேண்டும்என்று அந்நாட்டைச் சேர்ந்த மூத்த புத்த துறவியான உடுகமா ஸ்ரீபுத்தரக்கிதா தேரா என்பவர் கூறி வருகிறார்.ஸ்டேடியம் கட்டும் பணியை நிறுத்துவதற்காக ஜெயிலுக்குப் போகவும் தயார் என்று அவர் கூறி வருகிறார்.
ஸ்டேடியம் கட்டும் இடத்தை சமீபத்தில் நேரில் சென்று உடுகமா பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில்,ஸ்டேடியம் கட்டுவது தொடர்பாக புத்த மத ஆணையர் அலுவலகத்திலிருந்து எங்களக்கு எந்தத் தகவலும் இல்லை.இருந்தாலும் கூட, ஸ்டேடியம் கட்டுவதற்குத் தேவையான இடத்தை நாங்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம்கொடுத்து விட்டோம் என்றார்.
இந்த ஸ்டேடியம் மார்ச் 23-ம் தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவுள்ளது. அன்றைய தினம், இலங்கைக்கும்,இங்கிலாந்திற்கும் இடையே முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications