கர்நாடகம் வருகிறார் வாஜ்பாய்
பெங்களூர்:
பிரதமர் வாஜ்பாய் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகத்துக்கு வியாழக்கிழமை வருகிறார்.
டெல்லியிலிருந்து பிரதமர் வாஜ்பாய் தனி விமானம் மூலம் புறப்பட்டு வியாழக்கிழமை மாலை 4.45. மணிக்கு மங்களூர் வருகிறார். அங்கிருந்துஹெலிகாப்டர் மூலம் உடுப்பி செல்கிறார். அங்கு பாரதீய ஜனதா கட்சி சார்பில் நடக்கும் ஊழியர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பின்னர் கிருஷ்ணன் கோவிலைச் சுற்றிப் பார்க்கிறார். அங்கு ராஜாங்கனா சபாங்கனா அரங்கைத் திறந்து வைக்கிறார்.
19 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை உடுப்பியிலிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மங்களூர் செல்கிறார். பின்னர் அங்கிருந்து விமானம்மூலம் காலை 11.15 மணிக்கு பெங்களூர் வருகிறார். பெங்களூரில் ஆதிசுஞ்சனகிரி மகாசமஸ்தான மடம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வித்யா சவுதாஎன்ற பள்ளியைத் திறந்து வைக்கிறார். பின்னர் இன்போசிஸ் நிறுவனத்தை அவர் பார்வையிடுகிறார்.
பின்னர் ஒயிட்பீல்டு செல்லும் அவர் அங்கு ஸ்ரீசத்யசாய் இன்ஸ்டிடியூட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன மருத்துவமனையை திறந்து வைக்கிறார். பின்னர்கவர்னர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
விதானசவுதா வரவேற்பு மண்டபத்தில் மாலை 5.15. மணிக்கு பெங்களூர் சர்வதேச விமான நிலைய அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. அதில் பிரதமர்வாஜ்பாய் கலந்து கொள்கிறார். வெள்ளிக்கிழமை இரவு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications