தமிழர்கள் படுகொலை: 14 ராணுவ வீரர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 15 இலங்கை ராணுவ வீரர்களைப் போலீஸார் கைதுசெய்தனர்.

இவர்கள் அனைவரும் மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தப்பட்டு, பின்னர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஜனவரி 24 ம் தேதி வரை காவல்நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சாவகச்சேரி அருகேயுள்ள மிர்சுவில்லுக்கு தமிழர்கள் பலர் சென்றனர். மிர்சுவில் சென்ற தமிழர்களில் 5 வயது சிறுவன் உள்பட 9 பேர் திரும்பிவிட்டனர். 8 தமிழர்களைக் காணவில்லை. விசாரணையில் இறந்து கிடந்த அவர்களது சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. மேலும் அங்கிருந்து ஒருகுழந்தையின் காலும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை இலங்கை ராணுவ வீரர்கள் தான் கொலை செய்தார்கள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

தமிழர்கள், ராணுவ வீரர்களால் கொலை செய்யப்பட்ட சம்பத்தை நேரில் பார்த்த மகேஸ்வரன் என்பவர் கொலையில் சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்களைஅடையாளம் காட்டினார்.

இதையடுத்து கொலையில் தொடர்புடைய ராணுவ வீரர்களைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி ராணுவ கமாண்டர் உத்தரவிட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+