For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கவுடாவிற்காக சபரிமலை 18 ம் படி திறப்பு

By Staff
Google Oneindia Tamil News

பத்தனம்திட்டா (கேரளா):

சபரிமலை ஐயப்பன் கோயிலில் விதிமுறைகளை மீறி தேவகவுடாவிற்காக 18-ம் படி திறக்கப்பட்டது.

வழக்கமாகத் திறக்கப்படும் நேரத்திற்கு 2 மணி நேரம் முன்னதாக இந்த நடை திறக்கப்பட்டுள்ளதால் இந்த விஷயம்சர்ச்சையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமை இரவு (ஜனவரி-17) முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தலைவருமானதேவகவுடா சபரி மலைக்கு வந்து சேர்ந்தார்.

அவருடன் 11 பேர் அடங்கிய ஒரு குழுவினரும் வந்திருந்தனர். இங்கு நள்ளிரவில் பம்பையில் உள்ள ஓய்வுஇல்லத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் அங்குள்ள தேவஸ்தானத்தில் தேவகவுடாவிற்கு இருமுடிகட்டப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளசரரூபர ரவி செய்திருந்தார். ரவி, திருவிதாங்கூர் தேவசம் போர்டில் முக்கிய பொறுப்பும் வகித்து வருகிறார்.

எனவே தனது தலைவர் என்ற முறையில் விதிமுறைகளை மீறி அவரைக் சபரிமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.இருமுடி கட்டிய பிறகு டோலி எனப்படும் சுமை தூக்கிச் செல்லும் குதிரைகளில் அவர் ஏறிச் செல்ல மறுத்துவிட்டுநான்கு கிலோ மீட்டர் நடந்து சென்று சபரிமலையை அடைந்தார்.

அங்கு வழக்கமாகத் திறக்கப்படும் 5 மணிக்கு முன்பே 18ம் படி திறக்கப்பட்டு விட்டது. இதுவரை நடை திறப்பதற்குமுன்பு எப்போதுமே 18ம் படி திறந்ததில்லை. நடை திறந்தவுடன் சில நிமிடங்களில் தான் 18ம் படி திறக்கப்படும்.

ஆனால், நடை திறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே இந்த நடை திறக்கப்பட்டு தேவகவுடா மேலே சென்றுநடை திறக்கும் வரை அமர்ந்திருந்தார்.

இதையடுத்து கோயிலில் உள்ள முக்கிய குருக்கள், இதனை சபரிமலையில் புனிதத் தன்மையை மதியாத அவச்செயல் என அவரது செயலை விமர்சித்துள்ளனர்.

இது குறித்து சபரிமலையின் முதன்மை குருக்கள், கண்டரேரு ராஜீவருவிடம் கேட்டபோது இது பற்றி தனக்குஎதுவும் தெரியாது எனக் கூறிவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X