மீண்டும் என்னை முதல்வராக்குங்கள் .. ஜெ.
சென்னை:
தமிழகத்தின் முதல்வராக வர மக்கள் வாய்ப்பும், வாக்கும் அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமைதெரிவித்தார்.
அ.தி.மு.க.மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது. சென்னை மைலாப்பூரில் இலவச மருத்துவ முகாம் தொடக்க விழாநடந்தது. இதில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசியதாவது:
கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழாவின் போது தமிழகத்தில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று கூறினேன். அதன்படி கடந்த ஜனவரி முதல்இன்று வரை 54 மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
தற்போது 2 வது கட்டமாக மருத்துமுகாம் நடத்தப்படுகிறது. முகாம் தொடக்க விழா நடக்கும் இந்த ஆர்.ஆர்.சபா மிகவும் ராசியான இடமாகும்.இந்த சபாவில் தான் 1960 ல் எனது பரதநாட்டிய அரகேற்றம் நடந்தது.
அன்றுதான் நான் முதன்முதலாக பொதுமக்கள் முன் அறிமுகமானேன். இந்த சபாவில் ஆரம்பிக்கும் எந்தவொரு செயலும் வெற்றியையே பெறும்.இந்த இடம் ராசியான இடம் என்பதால் நான் கலைத்துறைக்குள் நுழைந்தேன். முன்னணி நட்சத்திரமாக விளங்கினேன்.
எம்.ஜி.ஆரை சந்தித்து அரசியலுக்கு வந்தேன். அ.தி.மு.க.வில் உறுப்பினரானேன். கொள்கைப் பரப்பு செயலாளர் பதவி பெற்றேன். உங்கள் விருப்பத்தினால்தற்போது கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறேன். மக்கள் விருப்பத்திற்கேற்ப தமிழக முதல்வராகவும் இருந்தேன்.
நான் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக ஆக எனக்கு வாய்ப்பும், வாக்கும் அளியுங்கள் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications