வல்லரசின் அடுத்த வாரிசு

Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் 43-வது அதிபராக பதவியேற்கவுள்ளார் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஜூனியர்.

உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபராக உள்ள பில் கிளிண்டனின் பதவிக்காலம்முடியப் போகும் நிலையில், அடுத்த அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே அடுத்த அதிபர் யார் என்ற கேள்வி எழுந்தது.

கிளிண்டனின் நடவடிக்கைகள் உலக அளவில் பரவலான வரவேற்பையும், ஓரளவு எதிர்ப்பையும்சம்பாதித்திருந்தது. ஜனநாயகக் கட்சி சார்பில் நீண்ட காலத்திற்குப் பிறகு அதிபரானவர் கிளிண்டன். அவரதுபதவிக்காலத்தின் கடைசிக் காலத்தில், மோனிகா லெவின்ஸ்கி ரூபத்தில், கிளிண்டனுக்கும், ஜனநாயகக் கட்சிக்கும்நெருக்கடி எழுந்தது. எனவே இந்த முறை குடியரசுக் கட்சி வேட்பாளர்தான் மீண்டும் அதிபர் பதவியைத் தக்கவைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Bill Clintonஆனால் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் அல் கோர் இதை மாற்றி விட்டார். குடியரசுக் கட்சிவேட்பாளர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஜூனியருக்கு கடும் போட்டியைக் கொடுத்தார் கோர். இதனால் தேர்தல் முடிவில்பெரும் குழப்பம் ஏற்பட்டது. 1 மாதத்திற்கு மேல் இழுத்த இந்த இழுபறி கோர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டவுடன்தான் முடிவுக்கு வந்தது.

அமெரிக்காவைப் பொருத்தவரை சதவீத முறைப்படிதான் நாடாளுமன்றத்தில் இடம் ஒதுக்கப்படும். மொத்தம் 538எலக்டோரல் ஓட்டுக்கள் எனப்படும் பிரதிநிதித்துவ வாக்குகள் உள்ளன.இவற்றில் 270 வாக்குகள் பெறுபவரேஅதிபராக முடியும்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 7 ம் தேதி நடைபெற்றது. ஜனநாயகக் கட்சி சார்பில், அல்கோரும், குடியரசுக்கட்சி சார்பில் ஜார்ஜ் புஷ் ஜூனியரும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டார்கள். புஷ், அல்கோரைத் தவிர பசுமைகட்சியின் தலைவர் ரால்ப்ஃ நாடரும் தேர்தலில் போட்டியிட்டார். இருந்தாலும் புஷ், கோருக்கிடையேதான்முக்கியப் போட்டி இருந்தது.

வாக்கு எண்ணிக்கையில் ஜார்ஜ் புஷ் துவக்கத்திலிருந்தே முன்னணியில் இருந்தார். தேர்தல் முடிவும்அறிவிக்கப்பட்டது. ஜார்ஜ் புஷ், வெற்றிக்குத் தேவையான வாக்குகளைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து அவரே அடுத்த அதிபர் என்ற நிலையும் உருவானது. அந்த சமயத்தில்தான், புளோரிடா மாநிலவாக்குகள் எண்ணிக்கையில் பெரும் குழப்பம் நடந்துள்ளது தெரிய வந்தது.

Algoreஇதையடுத்து தனது தோல்வியை ஒப்புக் கொள்ள கோர் மறுத்தார். இந்த மாநிலத்தில் அல்கோருக்கும்,புஷ்ஷூக்கும் இடையே மிகக் குறைந்த அளவிலேயே (1500 வாக்குகள்) வாக்கு வித்தியாசம் இருந்தது.இதையடுத்து புளோரிடாவில் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என்று குடியரசுக் கட்சி சார்பில்வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து கோர்ட்டிற்குச் சென்றார் புஷ். கோரும் விடவில்லை. இரு தரப்பினரும், மாறி, மாறி கோர்ட்டில்வழக்குகளைத் தொடுத்தனர். இரண்டு மாதங்களாக சட்டப்போர் நடந்தது. இறுதியில் புஷ்ஷுக்குச் சாதகமாகஅமெரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து வேறு வழியின்றி கோர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். புஷ் அதிபராக தடை நீங்கியது.

தோல்வியை ஒப்புக் கொண்டவுடன், புஷ்ஷுக்கு மனதார வாழ்த்துத் தெரிவித்தார் கோர். புஷ்ஷும், கோருக்குநன்றி தெரிவித்தார். (இந்திய அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள நல்ல பழக்கம்)

அப்பா வழியில் மகன்:

அமெரிக்காவின் 43 வது அதிபராக ஜனவரி 20 ம் தேதி சனிக்கிழமை ஜார்ஜ் டபிள்யூ புஷ் பதவியேற்க உள்ளார். 54வயதாகும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அமெரிக்காவின் 43 வது அதிபர். இவரது தந்தை ஜார்ஜ் புஷ் 1988 முதல் 1992 ம்ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்ஸாஸ் மாநில கவர்னராக இருந்த புஷ், தந்தையைப் போலவே ஆட்சி நடத்துவார் என்ற அறிகுறிகள்இப்போதே தெரிகின்றன. தந்தையின் ஆட்சிக்காலத்தில் ராணுவத் தளபதியாக இருந்த காலின் பாவல்தான் புஷ்ஜூனியரின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கப் போகிறார். இவர் தவிர, முக்கியப்பதவிகள் பலவற்றில், தந்தையின் ஆட்சிக்காலத்தில் இருந்தவர்களையே நியமிக்க முடிவு செய்துள்ளார் ஜூனியர்புஷ்.

இந்தியாவைப் பொருத்தவரை புஷ் வருகையால், கூடுதல் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டியதுஅவசியமாகியுள்ளது. காரணம், அமெரிக்காவில் இதற்கு முன்பு பதவி வகித்த குடியரசுக் கட்சி அதிபர்கள் யாரும்இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததில்லை. ஆனால் கிளிண்டன் பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில்,இந்திய-அமெரிக்க உறவில் இமாலய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.

இனிமேலும் இந்த நாடுகள் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்கிளிண்டனும், வாஜ்பாயும். இவர்களைப் போல நண்பர்கள் உண்டா என்ற கேள்வியும், இரு நாடுகளைப் பார்த்துக்கேட்கும் நிலை எழுந்துள்ளது. எனவே இதைத் தொடர்ந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம், இந்தியா முன்புபோல அல்லாது, உலகின் வல்லரசுகளில் ஒன்றாகும் அந்தஸ்தில் உள்ள நாடு என்ற நிலையும் புஷ் முன்பு உள்ளது.

தந்தையைப் போல அல்லாது, இந்தியாவுடன் நட்பை பலப்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளேன் என்று புஷ்ஜூனியரும் தெரிவித்துள்ளார். எனவே கிளிண்டன் ஏற்றி வைத்துள்ள நட்பு ஜோதியை, ஜூனியர் புஷ்தலைமையிலான அமெரிக்கா அணையாமல் காக்கும் என்று நம்புவோம்.

  • இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்கள் பட்டியல்:
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+