தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை
சென்னை:
தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் உரியநேரத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சட்டசபை தி.மு.க. எம்.எல்.ஏ. கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க.அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.கூட்டத்திற்கு திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி துணைச்செயலாளர்கள்,அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
ஜனவரி 20 ம் தேதி தொடங்கும் சட்டசபையில் எந்தெந்த உறுப்பினர்கள் பேசுவது, எந்தெந்த உறுப்பினர்கள் பேசுவது, விவாதங்களை எப்படி அமைத்துக்கொள்வது என்பது பற்றி கலந்து பேசினோம்.
எங்கள் அணியில் கூட்டணி குறித்து இன்னும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகவில்லை. விரைவில் உரிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications