மணமேடையில் காதலியைக் கைப்பற்றிய காதலன்
பாண்டிச்சேரி:
மணக்கோலத்தில் மணமேடையில் வேறொருவருக்கு மனைவியாவதற்காகஅமர்ந்திருந்த காதலியை காதலன் கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.
பாண்டிச்சேரிக்கு அருகில் இருக்கும் நெல்லிக்குப்பம், அண்ணாநகரில் வசித்துவருபவர் விஸ்வநாதன். இவர் வருவாய்த்துறையில் அதிகாரியாக பணிபுரிந்துவருகிறார்.
இவரது மகள் ஸ்ரீவித்யா (22). இவர் பாண்டிச்சேரி ஜான் போப் கல்லூரியில் பி.எட்படித்து வருகிறார். ஸ்ரீ வித்யாவுக்கும், அதே பகுதியில் வசித்து வரும்அந்தோணிசாமியின் மகன் அருள்மணி (23) என்பவரும் இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். அக்கம்பக்கத்து வீடுகளுக்கு தெரிந்தவிஷயம் காதலர்கள் வீடுகளுக்கும் தெரிய வந்தது. இரு வீட்டினரும் காதலர்களைகண்டித்தனர். கண்டிப்பால் காதல் மேலும் தீவிரமாக வளர்ந்தது.
அருள்மணி கிறிஸ்தவ மதத்தவர் என்பதால் ஸ்ரீவித்யாவின் தந்தை பெங்களூரைச்சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு தன் மகளை மணமுடிக்க நிச்சயம் செய்தார்.திருமணத்திற்கு ஸ்ரீவித்யா எதிர்ப்பு தெரிவிக்காததால் திருமணம் சுமூகமா நடைபெறும்என விஸ்வநாதன் நினைத்தார்.
திருமமணம் பாண்டிச்சேரி, அரியாங்குப்பத்தில் இருக்கும் தீர்க்கசுமங்கலி திருமணமண்டபத்தில் நடத்த ஏற்பாடு ஆகியிருந்தது. திருமண நாளன்று மேளதாளங்கள்முழங்க திருமண மண்டபமே களை கட்டியிருந்தது.
இந்த சமயத்தில் கல்யாண மண்டபத்திற்கு வந்த அருள்மணி மணக்கோலத்தில்அமர்ந்திருந்த தன் காதலியியை பிடித்து இழுத்தார். அவரும் தன் காதலன் அருகில்போய் நின்று கொண்டார்.
திருமணத்திற்கு வந்திருந்த சிலர் அருள்மணியை தாக்க முயன்றனர். அருள்மணியோ,ஸ்ரீவித்யா என்னை வேண்டாம் என சொல்லிவிட்டால் நான் இங்கிருந்து போய்விடுகிறேன் என்றார். ஆனால் ஸ்ரீவித்யா நான் திருமணம் செய்து கொண்டால்அருள்மணியைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறினார். இது கேட்டுஅதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் உடனே திருமண மண்டபத்தை காலிசெய்துவிட்டு சென்றுவிட்டனர்.
கோபமடைந்த ஸ்ரீவித்யாவின் அப்பா தன் மகளையும், அருள்மணியையும் காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றார். ஆனால் இருவரும் மேஜர் என்பதால் அவர்களைஒன்றும் செய்ய முடியாது என கூறி காதலர்களை வாழ வையுங்கள் என ஸ்ரீவித்யாவின்தந்தை விஸ்வநாதனை சமாதானம் செய்தனர்.
பளிச்சென, பிளாஷ் லைட் போல நடந்து முடிந்து விட்ட இந்த நிகழ்ச்சியால்பாண்டிச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications