எஸ்ட்ரேடா விலகினார் .. அரோயா அதிபரானார்
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில், துணை அதிபராகப் பதவி வகித்து வந்த க்ளோரியா அரோயா சனிக்கிழமை பிலிப்பைன்சின் புதிய அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார்.
லஞ்ச வழக்கில் சம்பந்தப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ஜோசப் எஸ்ட்ரேடாவுக்கு மக்கள் ஆதரவு குறைந்ததோடு, சட்டரீதியாகவும் நெருக்கடிஏற்பட்டது. இருந்தும் கூட அவர் அதிபர் பதவியிலிருந்து விலக மறுத்து வந்தார். இந்தச் சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்பு எஸ்ட்ரேடாவுக்கு எதிராகபிலிப்பைன்ஸ் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தச் சூழ்நிலையில், அதிபர் பதவியிலிருந்து எஸ்ட்ரேடா விலகியுள்ளார். துணை அதிபர் குளோரியா அரோயா புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
தலைநகர் மணிலாவில் எட்சா ஆலயத்தின் முன் அரோயாவின் ஆதரவாளர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் க்ளோரியா கூறுகையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் துணை அதிபராக இருந்த நான் அதிபராக பதவியேற்கிறேன். நான் ஒரு அதிபர் என்றமுறையில் எனது பணிகளைத் திறம்படச் செய்வேன். நாட்டு மக்களின் நலனிற்காகப் பாடுபடுவேன். எனக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்என்று பைபிள் மேல் சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.
நாட்டின் பொறுப்புக்களை கையில் எடுத்துக் கொண்டு அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் நடந்து கொள்வேன் என்றும் அவர் கூறினார்.
அரோயாவின் தந்தை முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications