ரஜினி மகளுக்கு சிறப்புப் பட்டம்
சென்னை:
சென்னையில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு நாட்டிய மயூரி என்ற பட்டத்தை துக்ளக் ஆசிரியரும், எம்.பி.யுமான சோசனிக்கிழமை வழங்கினார்.
நடனாஞ்சலி சபை சார்பில் நூற்றாண்டு நாட்டிய விழா நிகழ்ச்சி சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா கலந்து கொண்டுஆடினார்.
நாட்டிய விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட துக்ளக் ஆசிரியர் சோ, ஐஸ்வர்யாவுக்கு நாட்டிய மயூரி பட்டத்தை வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில், சங்கீதமும், நாட்டியமும் ஒருவருக்கு சொல்லிக் கொடுத்தால் மட்டும் வந்து விடாது. அது பிறப்பிலேயே வரும் தெய்வீகக்கலையாகும். நாட்டிய மயூரி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா அதை பொழுதுபோக்காக மட்டும் ஆடாமல் முழு திறமையையும் காட்டி பல பட்டங்களையும்,விருதுகளையும் பெற வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் நான் இந்த விழாவில் கலந்து கொள்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் தனது நடிப்பின்மூலம் மிகவும் பிரபலமானவர். அவரது மனைவி லதாவும் கலையார்வம் மிக்கவர்.
அப்படிப்பட்ட கலைக்குடும்பத்தில் பிறந்த தங்களது குழந்தைகளை எவ்வித தலைக்கனமும் இல்லாமல் மிகவும் பணிவோடு வளர்த்து உள்ளனர் லதாவும்,ரஜினிகாந்தும். ஐஸ்வர்யாவின் நாட்டியத்தைப் பார்த்தவர்கள் அவரது திறமையைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள் என்றார் சோ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications