தால் ஏரியில் குண்டுவெடிப்பு .. போலீஸ் அதிகாரி பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள புகழ் பெற்ற தால் ஏரி அருகே புதன்கிழமை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
காலை 10.10 மணிக்கு இந்த வெடிகுண்டு விபத்து நடந்தது. ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த வெடிகுண்டுவிபத்தின் சப்தம் கேட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
சாவு விவரம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இருப்பினும் ஒரு போலீஸ் அதிகாரி பலியானதாகதெரிவிக்கப்பட்டது. போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
காஷ்மீரில் சண்டை நிறுத்தம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்ட அடுத்த நாளே தால் ஏரிப் பகுதியில்வெடிகுண்டு வெடிப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதிகளின் வேலையாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. எந்தத் தீவிரவாத அமைப்பும் இதற்குஇதுவரை பொறுப்பேற்கவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications