முதல்வர் பெயரில் போலி அடையாள அட்டை?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோர் படங்களுடன்வெளியான போலி அடையாள அட்டையை அ.தி.மு.க எம்.எல்.ஏ.சுந்தரம் சட்டசபையில் புதன்கிழமை காட்டினார்.

இதனால் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே சபையில் கடும்வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பல பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும், போலியாக பெயர் மாற்றம்செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி த.மா.கா எம்.எ.ஏ.ஞானசேகரன் மற்றும் பலர் ஒத்திவைப்புத் தீர்மானமும், கவனஈர்ப்புத் தீர்மானமும் கொண்டு வந்தார்கள்.

ஞானசேகரன் கூறுகையில், தமிழகத்தில் 65 சதவீதம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைவழங்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆனால் 40 சதவிகிதம் மட்டுமேவழங்கப்பட்டுள்ளது. உயிரோடு இருக்கும் பலர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதுபோல் என் தொகுதியில் மட்டும் 90ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்றார்.

அப்போது சபாநாயகர் பழனிவேல்ராஜன், இப்பிரச்சனை தமிழகம் முழுவதும் உள்ளது என்றார்.

இதையடுத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ. சுந்தரம் வாக்காளர்களின் பெயரை ஆளும் கட்சியினர் சேர்க்கமுயற்சிக்கின்றனர் என்றார். இதையடுத்து சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதற்குப் பதிலளித்தப் பேசிய சபாநாயகர் தேர்தல் கமிஷன் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகத்தேர்தல் அதிகாரி தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிபிரச்சனையில்லை என்றார்.

இதையடுத்து சுந்தரம் பேசுகையில், சைதாப்பேட்டையில் மொக லேசர் என்ற கம்பெனி வாக்காளர் அடையாளஅட்டை தயாரிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் யாருக்கு வேண்டுமானாலும் போலிஅடையாள அட்டை அளிக்கத் தயாராக உள்ளது. முதல்வர் கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோருக்குக் கூடஅடையாள அட்டை கொடுத்திருக்கின்றனர் என்று கூறி ஆதாரங்களையும் காட்டினார்.

இதையடுத்து சபையில் கடும் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. பின்னர் சபாநாயகர் குறுக்கிட்டு இந்தப் பிரச்சனைகுறித்து உடனடியாக முடிவெடுக்கப்படும். தமிழக தேர்தல் அதிகாரி சாரங்கியை சட்டசபைக்கு வருவதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. நீங்கள் அவரை சந்தித்து விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்றார். இதையடுத்துசபையில் அமைதி நிலவியது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+