ஒசூரில் பயணிகள் நிழற்குடை அமைக்கத் திட்டம்
ஒசூர்:
ஒசூர் ரயில்நிலையத்தில் பயணிகள் நிழற்குடை விரைவில் அமைக்கப்படும் என தென்னக ரயில்வே பொதுமேலாளர் அஜித் கிஷோர் தெரிவித்தார்.
ஒசூர் ரயில் நிலைய பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அஜித் கிஷோர் புதன்கிழமை ஒசூர் வந்திருந்தார். அவர்நிருபர்களிடம் பேசுகையில், சென்னை - தாம்பரம் அகல ரயில் பாதை பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.தமிழ்நாட்டிலும், கேரளாவிலும்தான் அதிகமான அளவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றன.
புதிதாக ரயில்கள் விடுவதற்கு அதிக அளவு செலவாகிறது. பெரிய தொழிற்சாலைகள் இருந்தால் தான் புதியரயில்பாதைகள் அமைக்க முடியும்.
ஒசூர் ரயில் நிலையத்தில் 28 கி.மீ தூரம் வரை பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும். பயணிகள் சதவிகிதம்அதிகமானால் இங்கு மேம்பாலம் கட்டுவது குறித்து பரிசீலனை செய்யப்படும். தர்மபுரியிலும், சேலத்திலும் 2நாட்கள் ஆய்வு நடத்தப்படும் என கூறினார்.
பயணிகள் தங்கும் அறை. பொருட்கள் வைக்கும் அறை, தண்ணீர், கழிப்பிட அறை, சுகாதாரம், ரயில் நிலையத்தைசுற்றி அவர் பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications