கல்விக்காக ஒரு யாத்திரை
கோவை:
கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தை வளர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தியா முழுவதிலும் 12 ஆயிரம் கிலோ மீட்டருக்கு யாத்திரைநடத்த தெற்காசிய குழந்தை தொழில்முறை எதிர்ப்புக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இது குறித்து இந்தக் கூட்டமைப்பின் தலைவர் கைலாஷ் சத்தியமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவில் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தி இந்தியா முழுவதிலும் 12 ஆயிரம் கிலோ மீடடருக்கு யாத்திரை மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தைநடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீரில் முடியும் இந்த யாத்திரையின் போது கல்வி கற்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கவுள்ளோம். இங்குள்ளமக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் போதிய கல்வி அறிவு இல்லாதவர்கள். இதில் 62 சதவீதம் பேர் பெண்கள்.
12 கோடி குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டன. இந்தியாவில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் 40 சதவீதம் பள்ளிகளில் கரும்பலகையேஇல்லை. 30 சதவீதம், ஒரு ஆசிரியரைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 83 ன் கீழ் திருத்தியமைக்கப்பட்ட விதிமுறையில் 18 வயது வரை குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ராணுவத்திற்கான செலவைக் குறைத்து குழந்தைகளுக்கு கல்வி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்த 18 வயது வரை சம உரிமை, சமவாய்ப்பு என்ற ரீதியில் ஏழை, பணக்கார மாணவர்கள் வேறுபாடு இன்றி கல்வி அளிக்க வேண்டும்.
அடுத்த 5 ஆண்டில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கென ஒரு லட்சம் பேர் கொண்ட ஒரு அமைப்பை ஏற்படுத்தவும்முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications