பிணநகரமாகியது தொழில்நகரம்
டெல்லி:
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொழில்நகரமான குஜராத் குடியரசு தினத்தன்று ஏற்பட்ட பூகம்பத்தால் பெரும் அழிவை சந்தித்து விட்டது என்றேகூறலாம் என்று வர்த்தகப் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய வர்த்தக சம்மேளன அதிகாரிகள் தனிக்குழு ஒன்றை அமைத்துள்ளனர். இந்தக்குழு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்பு, மீட்பு நடவடிக்கை,மீண்டும் தொழில்கள் செய்ய முடியுமா என்பது குறித்து விசாரிப்பார்கள்.
குஜராத் மாநிலம் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய தொழில்நகரமாகும். இங்கு பெட்ரோகெமிக்கல், துணிவகைகள், உரவகைகள், உப்பு,விஸ்கோஸ், பல்புகள், காகிதங்கள், சிமென்ட், மருந்துப்பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும்பொருட்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தொழிலதிபர்கள் தொழில்நகரம் என்று வர்ணிக்கப்படும் குஜராத் மாநிலத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இந்தியாவின்பொருளாதார வளர்ச்சியில் குஜராத் முன்னிலை வகிக்கிறது.
குடியரசு தினத்தன்று ஏற்பட்ட பூகம்பம், பெருமளவில் உயிர்ச்சேதத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை. தொலைத்தொடர்பு, தொலைபேசி வயர்கள்,சாலைகள், மின்சார விநியோகம், ரயில்வே பாதைகள் ஆகியவற்றையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் மட்டும் ரூ 20 பில்லியன் அளவுக்குசேதம் ஏற்பட்டுள்ளது என்று முதல்நிலை கணக்கீடுகள் தெரிவித்துள்ளன.
ஆசியாவிலேயே மிகப்பெரிய எண்ணெய்க்கிணறான ரிலையன்ஸ் ஜாம்நகரில் உள்ளது. இங்கு நிலநடுக்கப்பாதிப்பு எதுவும் இல்லை எனினும் எண்ணெய்க்கிணறுபூட்டியே உள்ளது. ஹாசிரா, பீஜாப்பூர், ஜகதீஷ்பூர் பகுதிகளில் உள்ள பல தொழிற்சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன.
கான்ட்லா வில் உள்ள இந்திய எண்ணெய்க் கழகத்தில் முன்பகுதிகள் இடிந்து விழுந்து விட்டன. இங்கிருந்துதான் ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம்,டெல்லி ஹரியானா மாநிலங்களுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கிரிஷக் பாரதி கூட்டுறவு தொழிற்சாலை, லர்சன் டர்போ, எஸ்ஸார் ஸ்டீல்,ரிலையன்ஸ் தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள சேத மதிப்புக்கள் இன்னும் கணக்கிடப்படவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications