திருச்சி வந்தார் ஜெயா
திருச்சி:
ஜெயலலிதா பயணத் திட்டத்தை மாற்றியமைத்துக் கொண்டு ஒரு நாள் முன்னதாக திருச்சி வந்து சேர்ந்தார்.
தேசிய லீக் கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள ஞாயிற்றுக்கிழமை திருச்சி வருவதாக இருந்த அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதன் திட்டத்தை மாற்றியமைத்துக் கொண்டு சனிக்கிழமையன்றே திருச்சி வந்து சேர்ந்தார்.
தேசிய லீக் கட்சியின் மாநில மாநாட்டில் த.மா.கா தலைவர் மூப்பனார், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் நல்லகண்ணு உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அங்கிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் ஞாயிற்றுக்கிழமை காலைதிருச்சி வருவார் என கூறப்பட்டிருந்தாலும், அவர் பயணத் திட்டத்தில் ஏற்கனவே குழப்பம் இருந்து வந்தது.
இந்நிலையில் ஜெயலலிதா சனிக்கிழமை மாலை கார் மூலம் சென்னையிலிருந்து கிளம்பி ஞாயிற்றுக்கிழமை அதிகாலைக்குள் திருச்சி வந்து சேர்வார்எனவும் கூறப்பட்டது. இதனால் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் விழாவில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பங்கு கொண்டு எம்.ஆர். ராதா சிலையை திறந்து வைக்கிறார். இந்தவிழாவிற்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்த விழாவிலும் மூப்பனார் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் கலந்து கொண்ட பின் வி.பி.சிங் கூட்டணி பற்றியும்,மூன்றாவது அணி அமைப்பது பற்றியும் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார். இதை தவிர்பதற்காக ஜெயலலிதா முன்னாதக திருச்சிகிளம்பி விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் ஜெயலலிதா திருச்சி துறையூர் அருகில் இருக்கும் சிறுவாச்சூரில் உள்ள புகழ் வாய்ந்த காளிகோயிலில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக முன்னதாகஜெயலலிதா திருச்சி கிளம்பினார் என கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications