தேர்தலுக்குத் தயாராகிறது தேசிய லீக்
கரூர்:
தேசிய ஜனநிாயகக் கூட்டணியில், தமிழ் மாநில தேசிய லீக் கூட்டணின் சார்பாக வாணியம்பாடி தொகுதியில் திருப்பூர் அப்துல் சத்தார் போட்டியிடுவார் எனஅக்கட்சியின் பொதுச் செயலர் அப்துல் ஜப்பார் அறிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு முடிவதற்கு முன்பே இப்போது அவசர கதியில் தொகுதியைப் பிடிக்கும் முயற்சியில் சில கட்சிகள் முன்னணிவகிக்கின்றன. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி முதலில் ஆண்டிமடம் தொகுதியில் குரு என்பவர்போட்டியிடுவார் என அறிவித்தது.
இதையடுத்து ஈரோட்டில் சுத்தானந்தன் போட்டியிடுவர் என புதிய நீதிக் கட்சி அறிவித்தது. இதே போன்று இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில்இடம் பெற்றுள்ள தமிழ்மாநில தேசிய லீக் கூட்டணியின் சார்பாக திருப்பூர் அப்துல் சத்தார் வாணியம்பாடியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலர் அப்துல் ஜப்பார் தெரிவித்துள்ளார்.
பள்ளபட்டியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில தேசிய லீக் கட்சி, வரும் தேர்தலில் 10 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.துறைமுகம், நாகை, அரவக்குறிச்சி, திருவல்லிக் கேணி, ஆகிய இடங்கள் இதில் அடங்கும். இந்த இடங்களைப் பெற தேசிய ஜனநாயகக் கூட்டணியின்தலைவர் கருணாநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.
ஆனால் வாணியம்பாடியில் போட்டியிட வேட்பாளரைத் தேர்வு செய்து விட்டோம். அங்கு திருப்பூர் அப்துல் சத்தார் போட்டியிடுவார்.
அயோத்திப் பிரச்னையில், வாஜ்பாய் கூறிய கருத்துக்கள் முதலில் ஏற்புடையதாக இல்லாவிட்டாலும், அவர் குமரகத்தில் தங்கியிருந்தபோது எழுதியகருத்துக்கள் அயோத்தியப் பிரச்னைக்கு தீர்வாக அமைந்துள்ளது. அங்கு அவர் தங்கியிருந்தபோது, பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம் எனக்கூறியுள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்போம் எனக் கூறியுள்ளதும் பாராட்டுக்குரியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications