188 முறை அதிர்ந்த குஜராத்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
குஜராத் மாநிலத்தில் 24 மணிநேரத்தில் தொடர்ந்து 188 முறை சிறு சிறு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகமும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் சனிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து பாபா அணு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதாவது:
குஜராத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குப் பிறகு 188 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 15 க்கும்மேற்பட்ட நிலநடுக்கம் 5 ரிக்டர் அளவுக்கும் மேலாக இருந்தன. மேலும் இதுபோன்ற பூகம்பங்கள் தொடரவும்வாய்ப்புக்கள் உள்ளன.
அதனால் மத்திய அரசு உடனடியாக செயற்கைக்கோள் உதவியுடன் பூமி அதிர்ச்சி கண்காணிப்புக் கருவிகள் மூலம்பூகம்பம் பாதித்த இடங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பாபா அணு ஆராய்ச்சி மையம்தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications