பிறந்த நாளில் பூகம்ப வசூல்
டெல்லி:
முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி உறுப்பினரான அமர் சிங் தனது பிறந்த நாளுக்கு யாரும் பரிசு கொடுக்கவேண்டாம். அதற்குப் பதிலாக குஜராத் பூகம்பத்திற்கு நிதியுதவி அளியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளை ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினார். பிறந்தநாளின்போது வரும் விருந்தினர்கள், பூகம்பநிதியுதவி அளியுங்கள் என்று அவர் கூறியதையடுத்து அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூற வந்த தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள் அவரிடம்குஜராத் பூகம்ப நிதியுதவி அளித்தனர்.
அமர்சிங், குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ 3.40 கோடி வசூல் செய்துள்ளார். சஹாரா குரூப் நிறுவனத் தலைவர் சுப்ரதா ராயும்,குஜராத் ஆம்புஜா சிமென்ட் நியோடியா சகோதரர்களும் சேர்ந்து ரூ 30.1 லட்சம் கொடுத்துள்ளனர்.
ஸ்டாக் புரோக்கர் கேதான் பரிக் ரூ 20.1 லட்சம் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், நடிகர்கள் அமிதாப் பச்சன், அஜய் தேவ்கான்ஆகியோர் தலா ரூ 10.1 லட்சமும் அளித்துள்ளனர். நடிகைகள் ஸ்ரீதேவி மற்றும் பூஜா பத்ரா ஆகியோர் தலா ரூ 5 லட்சம் அளித்துள்ளனர். பிரதமர் நிவாரணநிதியுதவி திட்டத்தின் கீழ் தகவல் தொழில்துட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜனிடம் ரூ ஒரு கோடியை, அமர் சிங் கொடுத்தார்.
மும்பையிலுள்ள வைர வியாபாரிகள், அமர் சிங்கின் நண்பர்கள் என்று கூறி குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி வசூல் செய்துவருகிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications