தப்பித்த 100 பேர்
சென்னை:
பூகம்பம் நடந்த நேரத்தில் சென்னை வந்துவிட்டதால் உயிர்பிழைத்தோம் என்று குஜராத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர்.
சென்னை நகரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குஜராத்தியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் இரண்டு, மூன்று தலைமுறையாகவே இங்கு வசித்துவருகிறார்கள்.
இதுதவிர குஜராத்தில் இருந்து இங்கு வருகிறவர்கள் தங்கி செல்வதற்காக சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் குஜராத் மண்டலம் என்று அமைப்புசெயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி இருந்து குஜராத்தியர்கள் தங்களது வேலைகளை முடித்துவிட்டு, தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்வார்கள்.
இதுபோல கடந்த 26 ம் தேதி 100 பேர் சென்னை வந்திருந்த போதுதான் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு பலர் உயிரிழந்து விட்டனர். பூகம்பம் குறித்துகுஜராத் மண்டலில் தங்கு இருக்கும், அகமதாபாத் வேஞ்சல்பூரைச் சேர்ந்த பிபின் தபே (45) கூறியதாவது:
ஆட்டோமொபைல் பிசினஸ் நடத்தி வரும் நான் வியாபார விஷயமாக சென்னை வந்தேன். பூகம்பம் ஏற்பட்ட விஷயம் வெள்ளிக்கிழமை இரவுதான்தெரிந்தது. உடனடியாக நான் ஊருக்குப் போன் செய்தேன். அப்போது போன் வேலை செய்தது. நல்லவேளையாக எனது மனைவி மற்றும் மகள்களுக்குஎதுவும் ஆகவில்லை.
ஆனால் எனது சித்தப்பாவின் மகன் சமீர்தாவேயின் குடும்பத்தினர் அனைவரும் பூகம்பத்தால் உயிரிழந்து விட்டனர். அவர்கள் வீடு எங்கள் வீட்டிலிருந்து 2கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. குஜராத்துக்குச் சென்னையிலிருந்து சென்ற ரயில் குறித்து விவரம் எதுவும் தெரியவில்லை. தெரிந்திருந்தால் நான்சென்றிருப்பேன் என்றார்.
அகமதாபாத் மணிநகரைச் சேர்ந்த பாரோத் மற்றும் ஹேமந்த் ஆகியோர் கூறுகையில், பூகம்பம் ஏற்பட்டது என்று தெரிந்தவுடன் எங்களது இதயமேநின்று விடுவது போல் இருந்தது. உடனடியாக ஊருக்குப் போன் செய்தோம். கடவுள் அருளால் ஒன்றும் ஆகவில்லை என்றார்.
குஜராத் மண்டல் மேலாளர் குமார் கூறுகையில், இங்கு வந்த குஜராத்தியர்களில் பெரிய சோகத்தைச் சந்தித்தவர் ஜிதேந்திரபாய்தான். அவரது மனைவியும்,மகளும் சுகமாக இருக்கிறார்கள். ஆனால் அவர் நடத்தி வந்த குருகுல பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 49 மாணவர்கள் இறந்து போனார்கள்.பூகம்பம் ஏற்பட்ட போது அந்த மாணவர்கள் பரிட்சை எழுதிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு மாணவர் மட்டும் சீக்கிரமே பரிட்சை எழுதி விட்டுச்சென்று விட்டதால் அவருக்கு எதுவும் ஆகவில்லை என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications