சேலம், ஊட்டி, ஒசூரிலும் நிலநடுக்கம்
சேலம்:
குஜராத், பெங்களூரைத் தாக்கிய நில நடுக்கம் தமிழகத்தின் சேலம், தர்மபுரி மாவட்டங்களையும்விட்டுவைக்கவில்லை. இங்கும் திங்கள்கிழமை காலை லேசான நில நடுக்கம் இருந்தது.
திங்கள்கிழமை காலை 8.10 மணியளவில் இந்த நிலநடுக்கம் இருந்தது. ரிக்டர் அளவுகோலில், 4.3 என்ற ரிக்டர்அளவில் இது இருந்தது. தர்மபுரி மாவட்டத்தில் ஒசூர், கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில்இந்த நிலநடுக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, ஒசூர் தவிர, தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் பாதிப்புகள்இருந்தது. 2 நிமிடங்களுக்கு இந்த நிலநடுக்கம் இருந்தது.
நிலநடுக்கம் காரணமாக பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு ஓடி வந்தனர். ஒசூர்பகுதியில், சில வீடுகள், கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. தனியார் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைபார்த்த ஊழியர்கள் நிலநடுக்கத்தால் பீதியடைந்து நிறுவனத்தை விட்டு வெளியேறினர். அங்கு சில தளங்களில்வெடிப்புகள் ஏற்பட்டன.
ஒசூரில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால்எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மஞ்சுநாதா கூறுகையில், ஒசூரில் சில பள்ளிக் கட்டிடங்களில் விரிசல்ஏற்பட்டுள்ளது. போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மக்களை அமைதிப்படுத்தினர் என்றார்.
ஊட்டியிலும் ..
ஊட்டியிலும் காலையில் நில நடுக்கம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதியில் ஊட்டி, குன்னூர், மஞ்சூர்,கோத்தகிரி உள்பட பல இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது.
நீலகிரி மலைப் பகுதியாக இருந்தாலும் அங்கும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம்ஏற்பட்டதையடுத்து வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்து உருண்டன. கட்டில் , மேஜை, டி.வி பெட்டிகள்அசைந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடினர். குஜராத்தைப் போல இங்கும்நடக்குமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
இதைத் தொடர்ந்து கோவையில் நில நடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சம் கோவை நகர மக்களிடையே நிலவிவருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications