1.5 மில்லியன் கோருகிறது இந்தியா
பூஜ்:
குஜராத்தில் பூகம்பம் பாதித்த பகுதிகளை சீரமைக்க 1.5 மில்லியன் டாலர் உதவியைஇந்தியா உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இந்தியா கோரியுள்ளது.
வெள்ளிக்கிழமை இந்தியாவின் பல பகுதிகளிலும் பூகம்பம் ஏற்பட்டது.இதில்கடுமையாக பாதிக்கப்பட்டது குஜராத் மாநிலம் .இந்த பூகம்பத்தில் இதுவரை 30,000பேர் வரை இறந்திருப்பதாக கூறப்படுகிறது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தில் நிவாரண பணிகளுக்காக 1.5 மில்லியன்டாலர் நிதி உதவி கேட்டு உலகவங்கியுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான் நாடுகள் குஜராத் நிவாரணத்திற்கு நிதி உதவிசெய்வதாகவும், மீட்புக் குழுக்களை அனுப்பவும் முன் வந்துள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச முன்னேற்ற, மனிதாபினமான அமைப்பு5.5.மில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
குஜராத் பூகம்பம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்தெரிவிக்கையில், எங்களுக்கு கிடைத்துள்ள ததவலின் படி 20,000 பேர்இறந்திருக்கலாம் என தெரிகிறது. துருக்கியில் 1999-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில்17,000 வரை இறந்து போனார்கள் அதை விட இது அதிகமாகும் என கூறினார்.
குஜராத்தில் இருக்கும் பெரும் தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனங்கள் பெரிதளவில்சேதமடையவில்லை என கூறியுள்ளனர். திங்கள் கிழமை வணிகச் சந்தை துவங்கும்போது பூகம்ப விளைவுகள் வணிக சந்தையில் தெரியவரும் என வணிக வல்லுனர்கள்கூறுகின்றனர்.
அமெரிக்காவின் பூகோள ஆய்வுப்படி ரிக்டர் அளவு கோலில் 7.9 என்ற அளவில்பதிவாகியிருக்கும்என தெரிய வந்துள்ளது. இந்த பூகம்பம் கடந்த 50 ஆண்டுகளில்இந்தியாவில் ஏற்பட்ட மிகப் பெரும் பூகம்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது
குஜராத்தை புணரமைப்பதற்கு அதிக அளவு நிதி உதவி தேவைப்படும் என மத்தியநிதித்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். அரசு உலகவங்கியிடமிருந்து 1 பில்லியன் டாலரும் ஆசிய மேம்பாட்டு வங்கியிடமிருந்து 500மில்லியன் நிதி உதவியும் கேட்கவிருக்கிறது.
இந்தியாவின் இரண்டாவது பெரும் தொழில் நகரமான குஜராத்தில் ஏற்பட்டுள்ளபூகம்பம் இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும் என அவர் கூறினார்.
உலக லங்கியின் தலைவர் ஜேம்ஸ் டி வோல்பென்சோன் கூறுகையில், சில நொடிகளில்பெரும் இழப்பை சந்தித்துள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்காக நாங்கள்வருந்துகிறோம். இந்திய அரசுக்கும், பாதிக்கப்பட்ட மக்களும் இந்த நேரத்தில் பக்கபலமாக இருப்போம் என கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications