ரஷ்யாவில் ஒரு தவிப்பு
மாஸ்கோ:
ரஷ்யாவில் வசிக்கும் குஜராத்தைச் சேர்ந்த அஜய் ரெட்டி என்பவரும், அவரது மனைவி பிர்ஜூவும், பூகம்பம் ஏற்பட்டதையடுத்து தங்களதுஉறவினர்களுடன் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போயினர்.
தங்களது உறவினர்களக்கு என்ன நேர்ந்ததோ என்று அவர்கள் பரிதவித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் கூறுகையில், பூகம்பம் ஏற்பட்டதும் நாங்கள்உடனடியாக எங்களது பெற்றோர்களைத் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் முடியவில்லை. நாங்கள் 15 வருஷமாக மாஸ்கோவில் வசித்துவருகிறோம்.
பூகம்பம் ஏற்பட்டு இரண்டு நாட்கள் கழித்து திங்கள்கிழமைதான் எங்களால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடிந்தது. நல்ல வேளையாக அவர்கள் பாதிப்புஎதுவுமின்றி நலமுடன் இருக்கிறார்கள்.
எங்கள் வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில்தான் பல மாடிக்கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அங்குள்ள மக்கள் மீண்டும் பூகம்பம்ஏற்படலாம் என்று பயந்தபடி உள்ளனர்.
மாஸ்கோ மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவி சனத் மேத்தா கூறுகையில், எனது பெற்றோர்கள் பூஜ் நகரில் வசிக்கிறார்கள். மூன்று நாட்களாகஅவர்களைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனேன். என்னுடைய உறவினர்களைத் தொடர்பு கொள்ள முயன்றேன். அவர்களும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.
என் பெற்றோர் உயிருடன் இருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக் கொண்டிருக்கிறேன் என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
ரஷ்யாவில் வசிக்கும் இந்தியர்கள் குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மாஸ்கோவில் உள்ள இந்திய பெண்கள் சங்கம் ஏற்கனவே ரூ 1 லட்சம் பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்குள்ள இந்திய வர்த்தசங்கமும் நிதி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் வாஜ்பாய்க்கு பூகம்பம் குறித்து இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். அந்த இரங்கல் செய்தியில், இந்தியாவில் ஏற்பட்டபூகம்பத்திற்கு ரஷ்யா மிகவும் வருந்துகிறது.
இந்திய மக்களின் சோகத்தில் ரஷ்யா பங்கெடுத்துக் கொள்ளும். குஜராத்தில் பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டது என்று தெரிந்ததும் ரஷ்யாதான் முதன்முதலில் நவீன ரக விமானம் ஒன்றை மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைத்தது. பூஜ் நகரில் தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த 72 பேர் மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications