அழகிரியின் அமர்க்கள பிறந்த நாள்
மதுரை:
திமுகவிலிருந்து நீக்கப்பட்டாலும் கூட மு.க.அழகிரி தனது 50-வது பிறந்தநாளைவழக்கம் போல் கோலாகலமாக கொண்டாடினார்.
வீட்டிலிருந்து 25 கார்கள் புடைசூழ பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த திருவாவடுதுறை ஆதின மடத்திற்கு அழகிரி சென்றார்.
பல ஊர்களிலிருந்தும் கார் மற்றும் வேன்களில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள்வந்திருந்து அவரை வாழ்த்தினர். அவரது காலில் விழுந்து பல தொண்டர்கள் வாழ்த்துபெற்றனர்.
தனது பிறந்த நாளை முன்னிட்டு அழகிரி 100 பெண்களுக்கு இலவசமாக குடம், 100ஆண், பெண்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை, 75 பெண்களுக்கு இலவச தையல்மிஷின், சலவை தொழிலாளர்கள் 25 பேருக்கு அயர்ன் பாக்ஸ், நான்கு சக்கர வண்டிஆகியவற்றை வழங்கினார்.
மதுரை நகர தி.மு.க. முன்னாள் செயலாளரான தாவூத்துக்கு ரூ 2 லட்சத்தை குடும்ப நலநிதியாக தனது சொந்த பணத்தில் இருந்து அழகிரி வழங்கினார்.
தனக்கு மாலைகள், பொன்னாடைகள் ஆகியவற்றை வழங்காமல் பணமாகவழங்குமாறு அழகிரி கேட்டுக் கொண்டதன்படி அவருக்கு தொண்டர்கள் பணமாகவழங்கினர். இதுபோல் சேர்ந்த ரூ 1 லட்சத்தை குஜராத் பூகம்ப நிவாரண நிதியாகமாவட்ட ஆட்சி தலைவரிடம் கொடுக்கவிருப்பதாக அழகிரி கூறினார்.
பிறந்தநாள் விழாவில் எம்.எல்.ஏ.க்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications