குவிகிறது நிவாரணம்
டெல்லி:
குஜராத் சாணக்கியா பூரியிலுள்ள குஜராத் பவனில் பூகம்பத்தையடுத்து, பொதுமக்கள் கொடுக்கும் நிவாரணப் பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
குஜராத் பவனில் நிவாரணப் பொருட்களை வைக்க இடமில்லாத அளவுக்கு, இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் குவிந்தவண்ணம் உள்ளன. குஜராத் பவனுக்கு வரும் நிவாரணப் பொருட்களை அடுக்கி வைக்கும் பணியிலும், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கும்பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத் பவன் முழுவதும் துணிமணிகள், உணவுப்பொருட்கள், கம்பளிகள், மருந்துப் பொருட்கள் என்று எங்கு பார்த்தாலும் நிவாரணப் பொருட்களாகவேகாட்சியளிக்கின்றன. டாக்சி, கார், பஸ், ஆட்டோக்கள் மற்றும் நடந்து வந்தும் பொதுமக்கள் நிவாரணப் பொருட்களைக் கொடுத்து வருகிறார்கள்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள மக்கள் குஜராத் மக்களுக்காக எந்த விதத்திலாவது உதவி செய்யத் தயாராக இருக்கிறார்கள். சிலர் ரத்ததானம் செய்ய வேண்டுமானால் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்? உயிருக்குப் போராடும் நிலையிலுள்ளவர்களுக்கு உதவி செய்யத் தயாராகஉள்ளோம் என்றும் விசாரித்துச் செல்கிறார்கள்.
நிவாரணப் பொருட்கள் அளிக்க வந்த டாக்டர் நரேந்திர சிங் கூறுகையில், நான் இன்று குஜராத் மக்களுக்கு பண உதவியும், கம்பளிகளும்கொடுத்துள்ளேன். இன்னொரு நாள் ரத்த தானம் செய்வேன். குஜராத் மக்களுக்கு நமது உதவி கண்டிப்பாகத் தேவை. நாம் அனைவரும் அவர்களுக்குஉதவி புரிய வேண்டும் என்றார்.
குஜராத் பவனில், குஜராத் பூகம்ப நிவாரண நிதி பிரிவை மேற்பார்வையிடும் சர்மா என்பவர் கூறுகையில், பொதுமக்கள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிதியுதவி செய்யத் தயாராக இருக்கிறார்கள். தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. பெரும்பாலான பொருட்கள்மருந்துகள், உணவுப்பொருட்கள், துணிமணிகள், கம்பளிகள் ஆகியவை அதிகமான அளவில் வந்து குவிந்துள்ளன என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications