குஜராத்துக்கு உதவுங்கள் தமிழர்களே .. சரத்குமார்
சென்னை:
தமிழக மக்கள் குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாராளமாக உதவ வேண்டும் என்று நடிகர் சரத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
குஜராத் மக்களுக்கு உதவ வீடு வீடாகச் சென்று துணிமணிகளைச் சேகரிக்க வேண்டும். பூகம்பத்தால் லட்சக்கணக்கான குஜராத் மக்கள் மண்ணில்புதைந்து போன சம்பவம் அதிர்ச்சியடைய வைக்கிறது. அமைதி வழிப்பாதை தந்த காந்தி பிறந்த மண்ணில் தொடர்ந்து மரண ஓலம் கேட்டுக்கொண்டிருப்பது உலக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இயற்கையின் சீற்றத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை மனிதனுக்கு இல்லையென்றாலும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சக மனிதனுக்கு உதவும்நல்லெண்ணம் தமிழர்களுக்கு உண்டு.
உடைமைகளைப் பறிகொடுத்துத் தவிக்கும் மக்களுக்கு உடுக்க உடை அளிப்போம். அவர்களின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வோம். நற்பணிமன்றத்தோழர்களே தோள் தட்டிப் புறப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உபயோகப்படும் கம்பளி, ஜமுக்காளம், போர்வை ஆகியவற்றை அளியுங்கள்.
நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை வாழும் தோழர்கள் துணிமணிகளைச் சேகரித்து குஜராத் மக்களுக்கு அனுப்புங்கள். பாதிக்கப்பட்ட மக்களின்நலனுக்காகக் குரல் கொடுப்போம் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் சரத்குமார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications