பிஜியிலிருந்து உதவிக் கரம்
சுவா:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்காக பிஜி தீவில் வாழும் குஜராத்தியர்கள் நிதி வசூல் செய்யும் முயற்சியில்இறங்கியுள்ளனர்.
பிஜித் தீவில் செயல்பட்டு வரும் பிஜி குஜராத் சமாஜ் அமைப்பு சார்பில் நிதிவசூல் செய்யப்பட்டு வருகிறது. பிஜித் தீவில் மொத்தம் 3, 80, 000 இந்தியர்கள்வசித்து வருகின்றனர். இவர்களில் 50,000 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.
பிஜித் தீவில் வாழும் குஜராத் சமாஜ் மக்கள் வரும் பிப்ரவரி மாதம் 3 ம் தேதி கூடி, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று ஆலோசனை செய்கிறார்கள். பிஜித் தீவில் குடியேறிய குஜராத் மக்கள், அந்த மாநிலத்திலுள்ள நவ்சாரி, சூரத்,சாவ்வாஸ்ட் நகரங்களிலிருந்து குடியேறியவர்கள். இந்த 3 இடங்களும் பூகம்பத்தால் மிகவும் சேதமடைந்துள்ளன.
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலன்கள் ஏற்படும் வகையிலும், அமைதி ஏற்படும் வகையிலும் பிஜித் தீவில் உள்ள லட்சுமிநாராயணா கோவிலில் சாந்தி பிரார்த்தனைகள் தினமும் நடைபெறுகின்றன.
பிஜித் தீவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் மகேந்திர செளத்ரி அரசில் செனட் உறுப்பினராகவும், இந்திய வர்த்தக கவுன்சில் தலைவராகவும்இருந்த தல்பாத் ரத்தோடு, பூகம்பம் ஏற்பட்ட போது, குஜராத் மாநிலம் நவ்சாரியில் இருந்தார். பூகம்பம் ஏற்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு அவர்தனது மனைவியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் நன்றாக இருப்பதாகக் கூறினார்.
பிஜி இடைக்கால அரசு, குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டதற்காக, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிஜித்தீவு செய்திதொடர்புத்துறை அமைச்சர் ராட்டு இனோகே க்யுபுபோலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குஜராத்தில் நடந்த சம்பவத்திற்கு பிஜித் தீவு இரங்கல்தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications