"நாங்கள் வளர்ந்து விட்டோமே ..
மயிலாடுதுறை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்களைகேட்டு பெறுவோம் என தமிழக பா.ஜ.க. தலைவர் கிருபாநிதி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் தமிழக தலைவர் கிருபாநிதி மயிலாடுதுறையிவ் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறுகையில், எங்கள் கட்சியில் தற்போது 11 லட்சம் உறுப்பினர்கள்உள்ளனர். கட்சி நன்கு வளர்ந்துள்ளது.
பொது மக்களிடம் தண்ணீர் பற்றாக்குறை பற்றிய குறையும், சிறு சிறு ஊர்களுக்குசரியான சாலை இல்லை என்ற குறையும் உள்ளது.
சில இடங்களில் கழிவுப் பொருட்களால் சுகாதார கேடு ஏற்படுவதையும் நாங்கள் ரதயாத்திரை சென்ற போது அறிந்து கொண்டோம்.ஏழை, எளிய மக்கள் சிலர் நிலப்பட்டாகேட்டனர்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் 62 இடங்களை எங்களுக்கு வெற்றி வாய்ப்புஇருப்பதாக அடையாளம் கண்டிருக்கிறோம். எத்தனை இடங்களை கேட்போம்,பெறுவோம் என்பது பிறகுதான் தெரிய வரும்.
தி.மு.க.வுடன் எங்கள் கூட்டணி தொடரும். எங்கள் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளதால்கூடுதலான தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். கருணாநிதியும் கொடுப்பார் எனநம்புகிறோம்.
தமிழகத்தை பொறுத்த வரை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கருணாநிதிதான் தொகுதி பங்கீடு குறித்து அவர்தான் முடிவு செய்வார்.
நாங்கள் சாதிகளை ஆதரிக்கவில்லை. அவற்றை ஆதரிப்பவர்களும் விரைவில் திரும்பிவருவார்கள். தமிழகத்தில் சாதிக்கட்சிகள் அதிகமாகி வருகின்றன. இவற்றைவளரவிடக்கூடாது, சாதிக்கட்சிகளுடன் முதல்வர் கூட்டணி அமைக்க மாட்டார் எனநம்புகிறோம்,
சோ- ஜெயலலிதா சநத்திப்பு நட்பு முறையிலானது என சோ வே கூறியிருக்கிறார்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு டெல்லி, பம்பாய், கொல்கத்தாநகரங்களிலிருந்து தான் விமானம் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. நாங்கள் கேட்டுக் கொண்ட பின்புதான் சென்னையிலிருந்தும்விமானம் செல்கிறது.
குஜராத் நிவாரணத்திற்காக மாவட்டம் தோறும் வசூல் செய்து வருகிறோம். வசூலாகும்தொகையை தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று கூறினார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications