முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் ஜப்தி செய்ய உத்தரவு
கோவை:
அ.தி.மு.க வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தியின் பினாமி சொத்துக்களைப் பறிமுதல் செய்யஈரோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அசையா மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 25 லட்சம் ஆகும்.
அ.தி.மு.க. ஆட்சியில் கதர் துறை அமைச்சராக இருந்தவர் ஈஸ்வரர்த்தி. இவர் தாராபுரம் தனித் தொகுதியிலிருந்துதேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ. வாக இருந்தார்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மனைவி, மற்றும் உறவினர்களின் பெயர்களில் இவர் சொத்துச் சேர்த்ததாகப்புகார்கள் எழுந்தது.
ஈரோடு, தாராபுரம், அம்மாபேட்டை, சின்னக்கலையம்புத்தூர், ஆகிய பகுதிகளில் அசையாச் சொத்துக்களை இவர்வாங்கிக் குவித்துள்ளார்.
இவை அனைத்தும் தந்தை பெருமாள், சகோதரி தமிழ்ச்செல்வி, அவரது கணவர் சதாசிவம், மனைவி சுஜாதாஆகியோரது பெயரில் இந்த சொத்துக்கள் இருந்துள்ளன.
இந்த சொத்துக்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் மூலம் சம்பாதித்தவை. எனவே இவற்றை ஜப்தி செய்ய வேண்டும்என ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுப்ரமணியம் மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல்நீதிமன்றத்தில் புகார் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சீமதுரை, முதல் கட்டமாக முன்னாள்அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி, தனது உறவினர்கள்பெயரில் பினாமியாக வாங்கியுள்ள 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், மற்றும் 2 கார்கள், வீடுகள்ஆகியவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
ஜப்தி தொடர்பான வழக்கு விசாரணை இப்போது துவங்கியுள்ளது. இந்த விசாரணை தொடர்ந்து நடக்கும். இதன்முடிவில் ஈஸ்வரமூர்த்தி அதிகாரத் துஷ்பிரயோகம் செய்துள்ளாரா என்பது பற்றித் தெரிய வரும்.
அப்பீல் செய்வேன்: இந்நிலையில், வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியாகும் முன்பே சொத்துக்களை ஜப்தி செய்வதைஎதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனது தந்தை, மனைவி, சகோதரி ஆகியோர் வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தங்களை வழக்கில் சேர்த்தது குறித்து தனித் தனியே முறையீடு செய்துள்ளனர்.
மேலும், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அ.தி..கவிற்குஅவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், எனக்கு சீட் கிடைக்கும் என்பதால் தி.மு.க இதனைச்செய்ய முனைந்துள்ளது. எனவே ஈரோடு மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன்என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications