இலவு காத்த கிளி போல ..
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மூன்றாவது அணிக்கு தலைமையேற்க மூப்பனார் மறுத்துவிட்டால் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி பிறகு முடிவு செய்யப்படும் என்றுமக்கள் தமிழ் தேசம் கட்சித்தலைவர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மூப்பனார் என்ன சொல்லப் போகிறார் என்பதற்காக காத்திருக்கிறோம். அதற்குப் பிறகு அடுத்தநடவடிக்கை அமையும் என்றார்.
மார்ச் 10ம் தேதி வரை வாக்கு வங்கியை உறுதிப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ள அவர், குஜராத் பூகம்பத்தில்உயிரிழந்தவர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்ததோடு நிவாரண நிதியாக கட்சியின் சார்பில் 2லட்ச ரூபாய் அளித்தார்.
மக்கள் தமிழ் தேசம் சார்பில், மாவட்டம் தோறும் நிவாரண நிதி சேகரிக்கப்படுவதோடு ரத்த தான முகாம்களும் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications