கட்ச்சில் குடிநீர் பஞ்சம்
காந்திநகர் (குஜராத்):
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ், அஞ்சார், பச்சாவ், காந்திதாம், மான்ட்வி போன்ற நகரங்களிலும்,813 சிறு கிராமங்களிலும் கடுமையாகக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகம் செய்யும் குடிநீர் குழாய்கள் மற்றும் கிணறுகள் பூகம்பத்தால் சேதமடைந்துள்ளன. கட்ச் மாவட்டம் மற்றும் குஜராத் மாநிலத்தின்வடக்குப் பகுதிகளில் குடிநீர் இல்லாமல் வறட்சி நிலவுகிறது.
கட்ச் மாவட்டத்தில் உள்ள 450 க்கும் மேற்பட்ட குடிநீர்க்குழாய்கள் தண்ணீர் இல்லாமல் மணலாலும், களிமண்ணாலும் நிரம்பிக் கிடக்கின்றன.ஜனவரி 26 ம் தேதி இங்கு ஏற்பட்ட பூகம்பத்திற்குப்பின் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநில குடிநீர் மற்றும் கழிவுநீர் சரிசெய்யும் கால்வாய் செயலாளர் திரிபாதி, என்ஜினியர்கள், நிபுணர்கள் குழுவினருடன் சேதமடைந்து கிடக்கும்குடிநீர்க்குழாய்களை சீரமைப்பதற்காக கட்ச் மாவட்டம் சென்றுள்ளார்.
என்ஜினியர்கள் குழுவில் பாட்டன், பானாஸ்காந்தா, சுரேந்திரநகர், ராஜ்கோட் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். குஜராத்தில்ஏற்பட்ட பூகம்பம் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. பலர் வீடுகளையும், உடைமைகளையும்,உறவினர்களையும் இழந்து தவிக்கின்றனர்.
பூஜ், பச்சாவ், காந்திதாம், அஞ்சார், மான்ட்வி நகரங்களில் 64 க்கும் மேற்பட்ட குடிநீர்க்குழாய்கள் சேதமடைந்துள்ளன. பூஜ்ஜில் 12, மான்ட்வியில்8, அஞ்சாரில் 9, பச்சாவில் 6, காந்திதாமில் 30 குடிநீர் குழாய்களில் மணலும், களிமண்ணும் நிரம்பிக் கிடக்கின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications