குஜராத் .. நிதி வசூலிக்கிறது ராஜ் டி.வி.
சென்னை:
குஜராத் பூகம்ப நிவாரண நிதி திரட்டுவதற்காக சென்னை மெரினா கடற்கரையில் குஜராத்ரி என்ற பெயரில் இசைவிருந்து ஒன்றிற்கு தனியார்தொலைக்காட்சி நிறுவனமான ராஜ் டி.வி. ஏற்பாடு செய்துள்ளது.
காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் சாதகப்பறவைகள் குழுவினரின் இசைநிகழ்ச்சி நடைபெறும்.
தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் இந்நிகழ்ச்சிக்கு குஜராத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளதோடு அனுமதியும் இலவசம்.
இந்நிகழ்ச்சிக்காக வைரமுத்து எழுதியுள்ள குஜராத்தை பற்றிய பாடல்களும் நிகழ்ச்சியின் இடையிடையே இடம்பெறவிருக்கிறது.
நிகழ்ச்சிக்கு வரும் மக்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள மெகா உண்டியல்களில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தலாம். மேலும், பிப்ரவரி 11முதல் 13வரை நகர்முழுவதும் தகுந்த பாதுகாப்புடன் 30 உண்டியல்கள் வலம் வரும். குஜராத் நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று ராஜ்டி.வி.யின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
ஒரு கோடி ரூபாய் வரை இந்நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் என்று எதிர்பார்ப்பதாக ராஜ் டி.வி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்ச்சி முழுவதும்ராஜ் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications