நெற்றியிலிருந்து மூக்கு வருமா?
கோவை:
குடிபோதையில் நண்பனின் மூக்கைக் கடித்துத் துப்பினார் ஒருவர். மூக்கு அறுபட்டவருக்கு மீண்டும் கோவை அரசுமறுத்துவமனையில் பொறுத்தப்பட்டு சாதனை செய்யப்பட்டுள்ளது.
தாராபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (30). இவரும் இவரது நண்பரும் கடந்த நான்குமாதங்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்தனர். அப்போது அவரது நண்பர் தங்கராஜின் மூக்கை கடித்துத்துப்பினார்.
மூக்கை இழந்து, காயத்துடன் வலம் வந்தார் தங்கராஜ். ஊரில் உள்ளவர்கள் அவரை கேலி செய்ததால், மனம்நொந்தார். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு நடந்த விபரத்தை டாக்டர்களிடம்கூறினார்.
எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என அழாக் குறையாக வேண்டிய தங்கராஜுக்கு எப்படி சிகிச்சை தருவதுஎன்று டாக்டர் விஜயகுமார் என யோசனை செய்தார். பின்னர் அவரது நெற்றியில் இருந்து கொஞ்சம் சதையைஎடுத்து மூக்காக மாற்றி ஒட்டினார். இப்போது மூக்கு முளைத்தது.
இந்த மூக்கு குறித்து டாக்டர் விஜயகுமார் கூறுகையில், இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி என்பது இப்போது மட்டும்இல்லை. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இந்த சர்ஜரிதான் வெளிநாடுகளுக்குசென்று பிரபலமடைந்துள்ளது.
முகம் கோணலாக இருந்தால் கூட அதனை நேராக மாற்றி விட முடியும். மரு வளர்ந்து கண்ணை மூடிய ஒருபெண்ணுக்கு இது போன்ற அறுவை சிகிச்சை செய்து சரி செய்துள்ளோம்.
நண்பன் மூக்கை கடித்து விட்டான் எனக் கேள்விப்பட்டபோது எனக்கும் ஆச்சரியமாகத் தான் இருந்தது. இன்னும்நமது பழங்கால மருத்துவங்களில் கூறப்பட்டுள்ள அறுவை சிகிச்சைகளை ஆராய்ந்தால், எந்த நோயையும் எளிதில்தீர்க்க முடியும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications