தீவிரவாதம் அதிகரிப்பு .. காங். தலைவர் கவலை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பெருகி தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்க நடவடிக்கைஎடுக்குமாறு பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி, காங்கிரஸ் அரசைகேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பாண்டிச்சேரி மோகன் நகரில்இருக்கும் மூன்று மாடிக்கட்டிடத்தின் முதல் மாடியில் மர்மமான முறையில் ஏற்பட்டவெடிவிபத்து, குண்டு வெடிப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
இந்த விஷயத்தில் போலீஸ் எந்த விதமான அக்கரையும் செலுத்தாமல் உள்ளது. இதுகுறித்து விசாரித்து உண்மையை வெளிக் கொணர அரசு தேவையான நடவடிக்கையைஎடுக்க வேண்டும்.
சென்ற தி.மு.க. ஆட்சியின் போது ஒரலான்பேட்டையில் நடைபெற்ற குண்டு வெடிப்புகுறித்த விசாரணையின் முடிவு இன்று வரை வெளிவரவில்லை.
சென்னையில் இருக்கும் பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகையில் ரூ 2 கோடி மதிப்புள்ளஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இது குறித்தும் பாண்டிச்சேரி அரசுவிசாரிக்க வேண்டும் என கூறினார்
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
