அசாம் காஷ்மீர் அல்ல... அத்வானி
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு ஒத்துக் கொண்டால் மட்டுமே உல்பா தீவிரவாதிகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்தும் என்று மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானி கூறினார்.
அசாமில் தமது இரண்டு நாள் பயணத்தின் முடிவில் நிருபர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அசாமில் சண்டைநிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில்தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு மட்டுமே பதில் தாக்குதலை பாதுகாப்பு படை மேற்கொள்கிறது.
எனவே, தீவிரவாதிகள் வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அசாமின் நிலைமையை காஷ்மீரோடு ஒப்பிட முடியாது என்றும்தெரிவித்தார்.
நாகலாந்து தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது உல்பா தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாது பற்றி கேட்டபோது நாட்டில்பிரிவினை கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று பதிலளித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications