வீரப்பனை தேடும் பணியில் கேரள போலீஸ்
பாலக்காடு:
சந்தன வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் கேரள போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
சென்ற வெள்ளிக்கிழமை வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் கேரள காட்டு பகுதியான சாமந்திமலை பகுதியில்காணப்பட்டதையடுத்து கேரள போலீசாரும் வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது வரை கேரளபோலீசார் தமிழக, கர்நாடக சிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்கு உதவி புரியும் பணியில் மட்டுமேஈடுபட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை கேரள போலீசார் அடுவன்காடு காட்டுப்பகுதியில் நுழைந்து வாளையார் காட்டுப்பகுதியில் உள்ளமலம்புழாவைச்சுற்றி வளைத்துள்ளனர்.
பாலக்காடு உயர் போலீஸ் அதிகாரி டாமின் தாச்சன்கரை கேரள போலீசார் மலம்புழா, காவி காட்டுப்பகுதியில்பணியில் ஈடுபட்டுள்ளதை உறுதி படுத்தினார். ஆனால் எத்தனை பேர் அந்த பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றவிவரம் கூற மறுத்து விட்டார்.
கேரள போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வீரப்பனும் அவனது ஆட்களும் வாளையாரையொட்டியுள்ள பகுதியில்இருப்பதாக நிச்சயமாக தெரிய வந்துள்ளது என்றனர்.
கடந்த 15 நாட்களாக சாமந்தி மலையில் முகாமிட்டிருக்கும் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் அந்த பகுதிமுழுவதையும் சுற்றி வளைத்துள்ளனர். அங்கிருந்து தப்புவதற்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன.
வாளையார் காட்டுப் பகுதியில் கடும் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. பழைய வீரர்களை அனுப்பி விட்டு புதியஅதிரடிப்படை வீர்ரகள் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.
தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் இன்னும் சில நாட்களில் வீரப்பன் பிடிபட்டுவிடுவான் எனபோலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தேடுதல் பணயில் மோப்ப நாயும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது,.
வாளையார் காட்டுப்பகுதியில் பதிவு எண் இல்லாத மாருதி எஸ்டீம் காரை போலீசார் வாளையாறு காட்டுப்பகுதிஅருகே கண்டு பிடித்திருக்கிறார்கள். அந்த கார் வீரப்பன்னால் தப்பிக்க முயன்று முடியாமல் அங்குவிடப்பட்டிருக்கக் கூடும் என கருதப்படுகிறது.
தமிழக, கர்நாடக அரசுகள் வீரப்பனையோ அவன் ஆட்களையோ அவர்கள் தப்பி ஓட முயன்றாலோ அல்லதுசரணடைய மறுத்தாலோ சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications