இலங்கையிலிருந்து தேயிலை
கொழும்பு:
இலங்கையிலிருந்து, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு தேயிலை, துணி வகைகள் மற்றும் ஒரு விமானம் முழுவதும் நிவாரணப்பொருட்களும் குஜராத்துக்குச் செல்லவுள்ளன.
இதுகுறித்து இலங்கை அரசு உயர் அதிகாரிகள் கூறுகையில், இந்திய தூதர் கோபால கிருஷ்ண காந்தியிடம், குஜராத்துக்குத் தேவையான நிவாரணப்பொருட்களைக் கொடுக்குமாறு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
குஜராத்தில் வாழும் மக்கள் கடும் குளிரால் நடுங்குகின்றனர். அவர்களின் அத்தியாவசியத் தேவை தற்போது துணிமணிகள். இதனால் துணி வகைகளும்,தேயிலையும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்.
எவ்வுளவு தேயிலை மற்றும் துணி வகைகள் அனுப்பி வைக்கப்படும் என்று இதுவரை கணக்கிடப்படவில்லை. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம்நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். அந்த விமானத்தில் பயணிகள் யாரும் இருக்க மாட்டார்கள்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான முக்கிய குழுவான முதலீட்டார்கள் குழுவினர், ஜவுளித் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட துணி வகைகளை குஜராத்மக்களுக்காகக் கொடுக்கிறார்கள். இலங்கையில் வாழும் இந்தியர்களிடமிருந்து பணம், துணிமணிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வாங்கத்தீர்மானித்துள்ளோம் என்றார்.
குஜராத் இந்து மண்டலத்தின் தற்காலிகத் தலைவர், மிருதுளா அமலின் கூறுகையில், குஜராத்தில் வாழும் மக்களுக்காக சனிக்கிழமை பிரார்த்தனைநடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பிரார்த்தனையின் போது, குஜராத் பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்துவோம்.இதில் குஜராத் மண்டல பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசுவார்கள்.
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி செய்யுமாறு இந்திய தூதரகம் மற்றும் இலங்கை - இந்திய நண்பர்கள் சங்கத்தின் சார்பில்,பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும்.
பலர் எங்களிடம், குஜராத்துக்கு பூகம்ப நிவாரண உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளனர். அவர்களிடமிருந்து நிதி மற்றும் நிவாரண உதவிகள்வசூலிக்கப்படும். இலங்கையில் வாழும் 75 குஜராத்தி குடும்பங்களும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளனர்.
குஜராத்தில் வாழும் பெரும்பாலானவர்கள், எங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆவர். அவர்களுக்கு உதவ நாங்கள் காத்திருக்கிறோம்.இலங்கையில் வாழும் குஜராத்தியர்கள் தவிர, இங்கு வாழும் போஹ்ரா மக்கள், சிந்தி மக்கள், மேமன் மக்கள், தெலுங்கு மற்றும்மலையாளிகளும் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு நிவாரண உதவிகள் செய்வதாகத் தெரிவித்துள்ளனர் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications