கைகொடுக்கும் அனுபவம்
டேராடூன்:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 25,000 ராணுவ வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று லெப்டினன்ட் ஜெனரல்சுர்ஜித் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக டேராடூன் வந்த லெப்டினன்ட் ஜெனரல் சுர்ஜித் சிங் நிருபர்களிடம் கூறுகையில், குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டபகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.
மீட்புப்பணியில் 25,000 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் ஏற்கனவே லத்தூர், சாமோலி, ஒரிசா ஆகிய இடங்களில் புயல், பூகம்பம் ஏற்பட்ட போது மீட்புப்பணியில் ஈடுபட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. மாநில அரசுகள், குஜராத்தில் ஏற்பட்டது போன்ற இயற்கைச் சீற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications