கனடா குழுவுக்குத் தடை
டோரான்டோ:
கனடா நாட்டு மீட்புக் குழுவுக்கு சர்வதேச அளவிலான தரம் இல்லாத காரணத்தால் அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று கனடா சர்வதேசவளர்ச்சித்துறை அமைச்சர் மரியா மினா கூறி விட்டார்.
கனடா நாடாளுமன்ற எதிர்கட்சி உறுப்பினரும், இந்திய- கனட கூட்டணி உறுப்பினருமான தீபக் ஒபேராய், கனடாவிலிருந்து, பூகம்பத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்ளை மீட்பதற்கு மீட்புக்குழு அனுப்பப்படவில்லை. இதற்கு சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சர் மரியா மினா பதிலளிக்க வேண்டும்என்று குற்றம்சாட்டினார்.
இதையடுத்து மரியா மினா கூறுகையில், கனடாவிலிருந்து மீட்புக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பத் தயார். ஆனால் கனடா மீட்புக்குழுவில் சர்வதேச தரம்இல்லை. அதனால் அவர்களை என்னால் குஜராத்துக்கு அனுப்ப முடியாது.
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு மீட்புக்குழு அனுப்ப சர்வதேச அனுமதி, ஐ.நா. அனுமதி ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நாடு பெற்றிருக்க வேண்டும்.சர்வதேச அளவிலான தரம் இல்லாத காரணத்தால் கனடா மீட்புக் குழுவினருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் கனடா மீட்புக் குழுவைஇந்தியாவுக்கு அனுப்ப முடியாது.
கனடாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரி பீட்டர் சுதர்லான்ட் மற்றும் இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரி ரஜினிகாந்தா வர்மா ஆகியோரிடம்பூகம்பம் குறித்தும், அதற்கான நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் அவ்வப்போது அறிந்து கொள்கிறேன். இருப்பினும் கனடா சர்வதேசவளர்ச்சி நிறுவன ஊழியர்கள், குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி வசூல் மற்றும் நிவாரணப் பொருட்கள் வசூல் செய்துகொடுத்து வருகிறார்கள்.
மீட்புக் குழுவினர் தவிர குஜராத்துக்குத் தேவையான கூடாரங்கள் அமைப்பதற்கான பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள், துணிவகைகள், குடிநீர் ஆகியவற்றை கனடா செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பி வைத்துள்ளோம்.
கனடாவிலிருந்து ஏற்கனவே 5 மில்லியன் டாலர்கள் குஜராத் நிவாரண நிதியாக அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குத் தேவைப்படும் அளவுக்கு கனடாஇன்னும் நிதியுதவியை அதிகரிக்கும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications