அமெரிக்க மருத்துவக் குழு
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள தொற்றுநோய் தடுப்பு டாக்டர் தலைமையில் ஒரு குழு குஜராத்துக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத்திட்டமிட்டுள்ளது. அவர்கள் 2 மில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ள மருந்துப் பொருட்களையும் கொண்டு வருகிறார்கள்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தொற்று நோய் தடுப்பு பேராசிரியராக வேலை செய்து வருபவர் பாலசுப்ரமணியம். இவரும், இவருடன் வரும் ஒருகுழுவும் செவ்வாய்க்கிழமை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பூஜ் மற்றும் பிற பகுதிகளுக்கு வருகிறார்கள்.
மருந்துப் பொருட்கள் லாஸ் ஏஞ்சல்சிலிருந்து இலவசமாக கொரியன் ஏர்லைன்ஸ் மூலம் இந்தியா வருகிறது. இதில் காலரா, தொற்றுநோய், டைபாய்டுமற்றும் பல நோய்களைத் தடுக்கத் தேவையான மருந்துப் பொருட்கள் அடங்கும்.
லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இன்னொரு குழு, டாக்டர் வீரேந்திரா ஷா தலைமையில் வருகிறது. அவர்கள் ஜெயின் சமூகம் மற்றும் அமெரிக்காவில் வாழும்கொரியர்களின் சார்பில் மருந்துப் பொருட்களைக் கொண்டு வருகிறார்கள்.
அமெரிக்காவில் வாழும் கொரியர்கள், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து 2 மில்லியன் டாலர்கள்பெறுமானமுள்ள மருந்துப் பொருட்களை வசூல் செய்து கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications