ஆர்க்காடு வீராசாமிக்கும் வந்தது சிக்கல்!
சென்னை:
தேர்தல் குழப்பம் தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கும் சிக்கலைக்கொடுத்துள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த சட்டசபை கூட்டத் தொடரின்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ.சுந்தரம், முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய வர்த்தக அமைச்சர் முரசொலி மாறனின்போலி வாக்காளர் அட்டை என்று கூறி இரண்டு அட்டைகளைக் காட்டிபரபரப்பேற்படுத்தினார்.
அந்தக் குழப்பம் தீரும் முன் தற்போது தமிழக சுகாதார மற்றும் மின்சாரத் துறைஅமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு புதிய சிக்கல் வந்துள்ளது.
தனக்கு வந்த குழப்பம் குறித்து வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி, நான் அண்ணாநகரிலிருந்து என் வீட்டை மத்தியசென்னைக்கு மாற்றிக் கொண்டுள்ளதால், என் பெயரையும், என் குடும்பத்தார்பெயரையும் ஏன் அண்ணா நகர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கக்கூடாது எனகேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனென்றால் கடந்த 20 ஆண்டுகளாகஅண்ணாநகரில் வசித்து வருகிறேன். நான்கு தேர்தல்களில் அண்ணா நகர்தொகுதியிலிருந்து போட்டியிட்டிருக்கிறேன். வாக்காளர் பட்டியலில் என் பெயரும்,வாக்காளர் எண்ணும் இடம் பெற்றிருந்தது.
மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும், தலைமை தேர்தல் அதிகாரியிடமும் இது குறித்துதெரிவித்ததும் அவர்கள் தவறு நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தனர்.
அண்ணாநகர் தொகுதியிலிருந்து 96,000 பேரின் பெயர்கள் வாக்காளர்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதும் இது போன்ற தவறுகளால் நடந்திருக்கலாம் எனநினைக்கிறேன்.
எனவே தி.மு.க தொண்டர்கள் அனைவரும் தங்கள் பெயரும், தங்கள் குடும்பத்தார்பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications